Author Topic: கத்தரிக்காய் குழையல்  (Read 695 times)

Offline kanmani


    பெரிய கத்தரிக்காய் - ஒன்று
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 2
    தயிர் - முக்கால் டம்ளர்
    பால் - முக்கால் டம்ளர்
    உப்பு - தேவையான அளவு

    

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
   

கத்தரிக்காயை நன்கு கழுவி தோல் சீவி நான்காக நறுக்கவும். பெரிய பாத்திரத்தில் கத்தரிக்காயைப் போட்டு அது மூழ்குமளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். குழையும் பதம் வந்ததும் தண்ணீரை வடித்து குழிக்கரண்டியால் நன்கு மசிக்கவும்.
   

அதனுடன் உப்பு, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
   

பிறகு தயிர் மற்றும் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
   

சுவையான கத்தரிக்காய் குழையல் தயார்.