Author Topic: ஓட்ஸ் அடை  (Read 681 times)

Offline kanmani

ஓட்ஸ் அடை
« on: March 18, 2013, 11:20:45 AM »


    ஓட்ஸ் - ஒன்றரை கப்
    ரவா - முக்கால் கப்
    பச்சரிசி மாவு - அரை கப்
    பெரிய வெங்காயம் - 2
    முட்டைகோஸ் - கால் கப்
    மஞ்சள் தூள் - சிறிது
    மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
    சோம்பு தூள் - அரை மேசைக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    உப்பு - தேவைக்கு
    தயிர் - 2 மேசைக்கரண்டி
    எண்ணெய் - தேவைக்கு

 

வாணலியில் ஓட்ஸ் மற்றும் ரவா சேர்த்து லேசாக வறுத்து மிக்சியில் பொடிக்கவும்.
   

வெங்காயம், முட்டைகோஸை நறுக்கி வைக்கவும்.
   

பொடித்த ஓட்ஸ் கலவையில் அரிசி மாவு, தயிர், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
   

கரைத்த மாவில் வெங்காயம், முட்டைகோஸ், மஞ்சள் தூள், சோம்பு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
   

தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு கலந்து வைத்துள்ள மாவை அடையாக வார்த்து எடுக்கவும்.
   

சுவையான ஓட்ஸ் அடை ரெடி.