பிரவுன் அரிசி - அரை கப்
பாஸ்மதி அரிசி - கால் கப்
சம்பா அரிசி - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
தேங்காய், உப்பு - சிறிது
தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். பிரவுன் அரிசியை 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
முதலில் பிரவுன் அரிசியை வேக வைத்து, பின்பு அதனுடன் சம்பா அரிசி, பாஸ்மதி அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து வேக வைக்கவும்..
நன்கு குழைந்து சேர்ந்து வந்ததும் தேங்காய், உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
தேவைக்கேற்ப நீர் சேர்த்து பரிமாறவும்
உணவு ஒவ்வாமை, ஜுரம், வயிற்று வலி, ஜலதோஷம் போன்ற சமயத்தில் சாப்பிட ஏற்ற உணவிது. ஒரே அரிசியாக இல்லாமல் கலந்து செய்வதால், சேர்க்கும் அரிசியை வேகும் பதம் பார்த்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.