Author Topic: பார்ஸ்லே சிக்கன் குழம்பு  (Read 1250 times)

Offline kanmani



    கோழி - அரை கிலோ
    பார்ஸ்லே கீரை - ஒரு கைப்பிடி
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - கால் கிலோ
    பச்சை மிளகாய் - 2
    உருளைக்கிழங்கு - 2
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா - 2 தேக்கரண்டி
    தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
    பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
    தயிர் - 4 மேசைக்கரண்டி
    தேங்காய் பால் - ஒரு கப்
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    உப்பு

 

சுத்தம் செய்த பார்ஸ்லே கீரையுடன், தக்காளி, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
   

தக்காளி விழுதுடன் கோழியை சுத்தம் செய்து சேர்க்கவும். அதனுடன் உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து ஊற வைக்கவும்.
   

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
   

வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
   

பிறகு ஊற வைத்த கோழி கலவை, தயிர், நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
   

அதனுடன் தேங்காய் பால், 2 கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் சிறு தீயில் வேக விடவும்.
   

சுவையான பார்ஸ்லே சிக்கன் குழம்பு தயார்.

 

இதனுடன் தண்ணீர் சேர்க்காமல் கிரேவியாகவும் செய்யலாம். பார்ஸ்லே கீரை கிடைக்காவிட்டால் மல்லிக்கீரை சேர்த்து செய்யலாம். கரம் மசாலா தூள் சேர்ப்பதற்கு பதில் சில்லி சிக்கன் மசாலா சேர்த்தும் செய்யலாம்.