
அந்த அலுவலகத்தில் நேர்முகத் தேர்வுக்காக சிலர் காத்துக் கொண்டிருந்தனர் அதில் "சாதனா",வும் காத்துக் கொண்டிருந்தாள்.. அவள் முறை வந்ததும் நேர்முகத் தேர்வுக்காக எம்.டியின் அறையுள் அனுமதியுடன் நுழைந்தாள்..
"டேக் யுவர் சீட் மிஸ்.சாதனா",என்றார் எம்.டி..
" நன்றி சார்", என்றபடி அமர்ந்தாள்.. அவளுடைய சான்றிதல்களை அவர் பார்த்து விட்டு சில கேள்விகளை கேட்டார், அவளுடைய பதிலில் திருப்தி அடைந்தவர் அவளை ,கிளெர்க் ஆகா நியமித்தார்.. வேலை கிடைத்த சந்தோசத்தில் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மறுநாளில் இருந்து வேலையில் சேர்வதாக ஒப்புக் கொண்டாள்..
அலுவலகத்தை விட்டு வெளி வந்தவள் ஆட்டோவில் ஏறி தன் ஹாஸ்டலை அடைந்தாள், அவளுடைய மிக நெருக்கமான தோழி ,அவள் அறையில் காத்திருந்தாள், அவள் அறைக்குள் வந்ததும் சாதனாவை பார்த்து ,"என்ன டீ? வேலை கிடைச்சுடுச்சா?", என்றாள்..
"ஆமாம் டீ , ரொம்ப நல்ல கம்பெனி டீ சம்பளம் 10,000 தருவாங்க , டீ சஞ்சு " என்றாள் மகிழ்ச்சியுடன்..
"அது சேரி என் அருமை தோழிக்கு வேலை குடுக்காம போய்டுவாங்களா என்ன ",என்று அவளை ஆசையுடன் கட்டிக் கொண்டாள் ..
"ஹ்ம்ம் உனக்கு என்னை குறை சொல்ல நாக்கு வராதே போடீ ",என்றாள் சாதனா..
அவர்கள் 2ண்டு வருடமாய் தான் பழகுகிறார்கள் என்றாலும் 15து வருட நட்பைவிட மேலானது.. அவ்வளவு உண்மையான நட்பு.. சாதனாவின் பெற்றோர் அவள் கல்லூரி படிப்பு முடிக்கும் போதுதான் ( 2ண்டு வருடத்திற்கு முன்) ஒரு விபத்தில் இறந்தனர் , அவர்கள் இறந்ததும் சொந்தம் கைவிட்டுவிட்டது, ஹாஸ்டலில் சேர்ந்ததும் தான் "சஞ்சுவின் ",நட்பு கிடைத்தது ,அவளுக்கு எல்லாமுமாக இருந்து பார்த்து கொண்டவள் சஞ்சு, சஞ்சுவின் பெற்றோரும் சாதனாவை தங்கள் மகள் போல் பாவித்தார்கள்.. அவள் அவர்களின் அன்பில் பெற்றோர் இறந்த வருத்தத்தை மறந்தும் விட்டாள்.. 2ண்டு வருடமாக அவள் வேலை செய்த கம்பெனி மூட போகிறார்கள் என்பதால் இன்றைக்கு "குரு பிரசாத்" கம்பனிக்கு நேர்முகத் தேர்விற்கு சென்றாள், அதில் வெற்றியும் அடைந்துவிட்டாள்..
மறுநாள் காலை அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் ,
"என்ன டீ செல்லம் கிளம்பியாச்சா .? சாப்பிட வா டீ ",என்று அருகில் வந்தாள் சஞ்சு .. "கிளம்பீட்டேன் டீ சரி வா சாப்பிட போகலாம் " என்றபடி அவளை அழைத்துக் கொண்டு சாப்பாட்டு அறைக்கு சென்றாள் , உணவு முடிந்ததும் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்..
சாதனா அலுவலகத்தை அடைந்ததும் தன் வேலையை பற்றி தெரிந்து கொள்ள மேனேஜரின் அறைக்கு சென்றாள், "மே ஐ கம் இன் சார்.?", என்றாள்.. உள்ளிருந்து
பதில் வந்தது ,"எஸ் கம் இன் ",என்று.. சாதனா உள்ளே நுழைந்தாள்.. மேனேஜர் அவளுக்கு முதுகுக் காட்டி அமர்ந்திருந்தார்.. சாதனா அவர் திரும்பட்டும் என்று காத்திருந்தாள்.. அவள் அறையை பார்த்தாள், சுத்தமாக இருந்தது, மேஜையின் மேல் "பிரசாத் என்று பெயர் பொரிக்க பட்ட பலகை இருந்தது ", ஒஹ் மேனேஜரின் பெயர் 'பிரசாத்'ஆ , என்று தன்னுள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த 'பிரசாத் ', அவள் பக்கம் திரும்பினார், "ப்ளீஸ் டேக் யுவர் சீட், ",என்று புன்னகையுடன் அவளைப் பார்த்தார்.. அவள் அவரை ஏறிட்டாள், அவன் மிக இளமையாக , கம்பீரமாக, லட்சணமாக, பிறரை வசீகரிக்கும் முகத்துடனும்,புன்னகையுடனும் இருந்தான் .. ஆனால் சாதனாவுக்கு யாரையும் சீக்கிரம் பிடித்து விடாது, பிரசாத்தை பார்த்ததும் மற்றவர்களுக்கு பிடித்துவிடும் ஆனால் சாதனா அவனை சாதாரணமாகத் தான் பார்த்தாள்..
"இட்ஸ் ஓகே சார் .. ஐ ஆம் சாதனா ", என்றாள் பணிவாக..
"ஒஹ் நீங்கதான் சாதனாவா , உங்க வேலையை பற்றி சொல்கிறேன் ',என்று வேலையை பற்றி சொல்லத் தொடங்கினான் .. அவளும் பணிவாக கேட்டுக் கொண்டாள்.. பின் அவன் அவளை பார்த்து ,"இன்னும் எதாவது சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள் ,",என்றான் இயல்பாய்..
"ஓகே சார் .. ",என்று தலையை ஆட்டினாள்.. பிரசாத் எழுந்து ,"வாங்க சாதனா , உங்க இடத்தை காட்டுறேன் ",என்று வெளியேறினான் , அவளும் அவனை தொடர்ந்து சென்று அவன் சொன்ன இடத்தில் அமர்ந்தாள்..
அவள் வந்தவுடன் அனைவரிடமும் பேசி பழகிவிட்டாள், வேலைகளையும் சீக்கிரம் கற்றுக் கொண்டாள்.. மதியம் ,,.. "சாதனா வாங்க சாப்பிட போகலாம் ,இங்கே வேலை செய்யும் அனைவரும் மேனேஜருடன் தான் சேர்ந்து சாப்பிடுவோம் ,நீங்களும் வாங்க ",என்றாள் அவளுக்கு அருகில் இருந்த 'வாணி ' என்பவள்..
"ஒஹ் சரி வாணி வாங்க ",என்று லஞ்ச் box உடன் சென்றாள்..
அனைவரும் சாப்பிடும் போது பிரசாத் அவளை எல்லோர்க்கும் அறிமுகம் செய்து வைத்தான் ..
இது இந்த கம்பனியின் வழக்கம் , அப்போது தான் எல்லோருக்கும் ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொள்ள முடியும் என்றான் பிரசாத் , அவளைப் பார்த்து.. சாதனாவும் சரி என்று தலையை ஆட்டினாள், வாணியிடம் திரும்பி, "மேனேஜர் ஏன் அலுவலர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறார்.? "
வாணி அவளிடம் ,"அவர் ரொம்ப நல்ல குணம் உடையவர் சாதனா, கம்பனியில் யாருக்காவது எந்த நல்லது கேட்டது என்றாலும் முதல் ஆளாய் நிற்பார், எதாவது தேவை என்றாலும் அவற்றை புரிந்துக் கொண்டு உதவி செய்வார் ", என்றாள் பெருமையாய்.. சதனாவிர்க்கு ஆச்சரியமாய் இருந்தது இவ்வளவு நல்ல மேனேஜரா என்று.? சாப்பாடு முடிந்ததும் வேலையை பார்க்க சென்றனர் ,..
அப்போது பிரசாத் சாதனாவின் இடத்தில் வந்து நின்றான் , நல்ல வேலை கத்துகிடீங்க அதுக்குள்ள.? என்றான்,, புதிதாய் வந்தால் அவர்களுக்கு என்ன தேவை எப்படி வேலை செய்கிறார்கள் என்று பார்ப்பான்..
"நன்றி சார்",என்றாள்..
"இட் இஸ் ஓகே . வேலையை பாருங்க ", என்று நகர்ந்தான்..
அவளும் வேலைகளை முடித்து விட்டு ஹாஸ்டலுக்கு செல்வதற்காக வெளியே வந்தாள். அங்கே மேனேஜர் பிரசாத் காரை வெளியே எடுத்துக் கொண்டிருந்தார் , பிரசாத் , சாதனவை பார்த்தான், அவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான் "இவளை காலையில் பார்த்ததும் ஏனோ இனம் புரியாத சந்தோஷம் ஏற்ப்பட்டது, அவள் திரும்பும் போது அவள் கூந்தல் என்ன நீளம் ? அட தேவதையாய் ஏன் கண்ணுக்கு தெரிகிறாளே இதுவரை யாரும் எனக்கு இப்படி தெரிந்ததில்லை .. இவள் என்னை இந்த ஒரே நாளில் என்னை வதைக்கிராளே.? ", என்று அவளை பார்த்து வியந்தான்..
அவள் பஸ் ஸ்டாப்பில் நிற்ப்பதை பார்த்து காரை சற்று பஸ் ஸ்டாப்இன் அருகில் அவளுக்கு தெரியாத வாறு நிறுத்துவிட்டு அவளை பார்த்தான், அவள் அவனை கவனிக்கவில்லை, அப்போது அவள் அருகில் ஒருவன் வந்து வழிந்து பேசினான் அவளுக்கு வந்ததே கோபம் , அந்த வழிச்சல் மன்னனை பளார் என அறைந்து விட்டாள்.. ஆனால் அவன் ,"இதோ பாரு டீ உன்னை சும்மா விடமாட்டேன் உன் வாழ்கையை அழிக்கிறேனா இல்லையா பாரு "என்று கத்தினான் . சாதனா பயந்து போனாள்.. இதை பார்த்து கொண்டிருந்த பிரசாத் சட்டென காரை விட்டு இறங்கி அந்த வழிசல் மன்னனின் சட்டையை கொத்தாய் பிடித்து உலுக்கினான் , "டேய் என்ன டா சவுண்ட் விடுறே ஒரு பொன்னை ரோடுல நிம்மதியா நிக்க விடமாடீன்களா? "என்று கத்தினான்.. அந்த வழிச்சல் மன்னன் ,"டேய் நீ romeo வா என்ன ? ரொம்ப சீனு காட்டாத இந்த 'ரவி' யாருன்னு தெரியுமா உன்னையும் சும்மாவிடமாட்டேன் நான் யாருன்னு கட்டுறேன் ", என்று திரும்பவும் கத்திவிட்டு தன் சட்டையின் மேல் இருந்த பிரசாத்தின் கையை பிடித்து
உதறிவிட்டு சென்றுவிட்டான்..
சாதனாவின் மனதில் பிரசாத்தின் மேல் மதிப்பு வந்தாலும் அவளை காப்பாற்ற வந்து அவன் பிரச்னையில் மாட்டி கொண்டானே என்று வருந்தினாள் , பிரசாத்திடம் திரும்பி ,"உங்களுடன் நான் உதவி கேட்டேனா ? நீங்க எதுக்கு இதுல தலையிடீங்க ?", என்று மனதை கல்லாகி கொண்டு கேட்டாள்..
அவன் அவளை ஆச்சரியமாய் பார்த்தான்,"ஏன் இப்படி பேசுறீங்க யார இருந்தாலும் இதை தான் நான் செஞ்சுருப்பேன் நீங்க என்னை தப்பா புரிஞ்சுகிடீங்க ,சாதனா" என்றான்..
"ஒஹ் சரிங்க எனி வே ரொம்ப நன்றி ,", என்று அவனது பதிலுக்கு காத்திராமல் அங்கு நின்ற பேருந்தில் ஏறி கொண்டாள்.. அவன் அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தான், "இவள் ஏன் இப்படி செய்தால் நான் என்ன தவறு செய்தேன் .?என்று குழப்பத்துடன் அவனும் அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டான் "..
ஹாஸ்டலை அடைந்தவள் சஞ்சுவிடம் சென்று நடந்ததை சொன்னாள்.. சஞ்சு அவளை பார்த்து ,"ஏன் சாதனா இப்படி அவரை திட்டினே அவரு நல்லது தானே செஞ்சாரு",என்றாள்..
"ஆமாம் , அதை செய்ய இவரு யாரு "., என்றாள் ..
சஞ்சு சாதனாவின் மனதை அறிந்துக் கொண்டாள் அவளை பார்த்து "ஹே என்னிடமே நீ மறைக்க ஆரம்பித்து விட்டாய், " என்றாள்.
சாதனா ஒன்றும் புரியாமல் என்ன என்று புருவத்தை உயர்த்தினாள்..
"சாதனா நீ பிரசாத்தை காதலித்து விடுவாயோ என்ற பயத்தில் தான் அவரை திட்டிவிட்டு வந்திருக்கிறாய், இதே உதவியை வேறு யாரவது செய்திருந்தால் நீ நிச்சயமாக திட்டிருக்க மாட்டே", என்றாள் அவளை ஆழ்ந்து பார்த்து ..
சாதனா தலையை குனிந்து கொண்டாள் ஏன் என்றால் சஞ்சு சொன்னது உண்மைதான் , வாணி பிரசாத்தை பற்றி சொன்னதும் அவளுக்குள் அவன் மீது மதிப்பும், ஒரு வித பிடித்துப் போன உணர்வும் வந்தது..
சாதனா என்ன ஏதும் பேச மாடிங்க்ரே நான் சொன்னது உண்மை தானே ?என்று கேட்டாள் சஞ்சு..
"ஆமாம் . இதுவரை நான் இப்படி இருந்ததில்லை டீ ஆனால் அவரை பார்த்ததும் ஏனோ என்னக்கு பயமாய் இருக்கு காதலித்து விடுவேனோ என்று", சாதனா தயங்கி தயங்கி அவளை பார்க்க முடியாமல் சொன்னாள்.
"சாது இது தப்பில்ல அவருதான் நல்லவர் என்று சொல்கிறாயே பிறகு என்ன .?"
"இல்ல சஞ்சு அவரு நல்லவரா இருந்தாலும், அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் நான் காதலித்து தோற்க வேண்டுமே அதை என்னால் தாங்கி கொள்ள முடியாது, எனக்கு அப்பா, அம்மா இருவரும் பாசமாய் இருந்தும் அவர்கள் பாசம் காட்ட நிலைக்கவில்லை .. பிரசாத்தை நான் காதலித்து அவருக்கு என்னை பிடிக்காவிட்டால் இது எல்லாம் தேவையா டீ அதான் ",
"நீ சொல்வதும் சரிதான் சாது , அவரிடம் பேசுவதை தவிர்த்துவிடு ",
"ஹ்ம்ம் சரி சாப்பிடலாம் வா ", என்று சொல்ல இருவரும் சாப்பிட்டு விட்டு வந்து படுத்துக் கொண்டனர் .. சாதனாவுக்கு தூக்கம் வரவில்லை அவனை காதலிக்க கூடாது என்று மனதில் 1000 தடவை சொல்லி கொண்டிருந்தாள். அப்படியே 2ண்டு மணிக்கு மேல் உறங்கிவிட்டாள்..
காலையில் எழுந்து அலுவலகத்திற்கு கிளம்பி சென்றுவிட்டாள்.. அங்கே.. அவள் இயந்திரமாய் வேலைகளை செய்யலானாள் , அவளுக்கு இண்டெர் காமில் அழைப்பு வந்தது , "ஹெலோ "என்றாள். "ஹெலோ நான் பிரசாத் பேசுறேன் ஏன் அறைக்கு வாங்க ",என்று receiverஐ வைத்துவிட்டான்.. சாதானவும் எதற்காக அவளை அழைத்தான் என்று யோசித்தவாறே அவன் அறைக்குள் அனுமதியுடன் சென்றாள் ..
அவன் அவளை பார்த்து ,"சாதனா வேலையில் எதாவது சந்தேகம் இருக்கா ?",என்றான் .. அவள் அவனை பார்க்காமல் தரையை பார்த்துக் கொண்டே "no சார் ",என்றாள்.. அவன் அவளை ஆழ்ந்து பார்த்தான், தான் காதலித்து ரொம்ப நாட்கள் பழகிய காதலியை பார்ப்பது போல பார்த்தான் ..
"சாதனா நேற்று நான் என்ன செய்தேன் என்று என் மீது கோபப்பட்டீங்க ? "
"சார் தேவை இல்லாததை பேசாதீங்க. நான் வரேன் ", என்று அவன் அறையை விட்டு வெளியே வந்தாள்.. மனதில், அவனை அப்பிடி பேசியதுக்கு வருந்தினாள் .. இப்படியே ஒரு வாரம் ஓடிவிட்டது .. மறுநாள் காலை, சாதனாவை பிரசாத் அவன் அறைக்கு வரும்படி அழைத்தான் , அவள் சென்றாள், அவன் அவளிடம் "நேற்று உங்களிடம் ஒரு ப்ராஜெக்ட் fileஐ குடுத்தேன்ல அதை கொண்டு வாங்க ",என்றான்
"ஓகே சார் ",என்று fileஐ எடுக்க சென்றாள் .. அதை அவளுடைய டிராவ்வில் தான் வைத்து பூட்டினாள், இப்பொது அந்த டிராவ்வில் அந்த fileஐ காணவில்லை பதறிப் போனாள் மறுபடியும் தேடினாள் ஆனால் file கிடைக்கல , பயந்துவிட்டாள்..
அவள் அருகே ஒரு குரல் கேட்டது திரும்பினாள், பிரசாத் நின்று கொண்டிருந்தான்.. "என்ன செய்றீங்க fileஐ இன்னுமா எடுக்குறீங்க ?"
"சார் இல்ல அது வந்து fileஐ நான் நேத்து இங்கே தான் வெச்சேன் ஆனா இப்போ அது காணோம் ",என்று தயங்கியவாறே கூறினாள்..
அவனுக்கு சுரர் என கோவம் ஏறினது,"என்ன சொல்றீங்க எவ்வளவு முக்கியமான பைல் அது ",என்று கத்தினான்..
அவள் பயந்துக் கொண்டே, "சார் இல்லை நான் பூட்டிவிட்டு தான் போனேன் அதை யாரோ எடுத்திருக்க வேண்டும் என்னை நம்புங்க ",என்றால் பரிதாபமாக ..
அவனுடைய மனம் இளகியது , யோசித்தான் "இவள் மிக கவனமாய் இருப்பவள் கண்டிப்பா பூட்டிவிட்டு தான் சென்றிருப்பாள் யாரோ எடுத்திருகிறார்கள் . விசாரிப்போம் ",என்று யோசித்தான்..
"சரி பாக்கலாம்.. "என்று அவளிடம் கூறிவிட்டு , வாட்ச்மன் ஐ அழைத்தான் , அவன் சிறிது நேரத்தில் அங்கே வந்தான் , அவனிடம் பிரசாத் விசாரிச்சான்.. "நேத்து கடைசியா யாரு போனது ஆபீசை விட்டு", என்று அவரிடம் விசாரித்தான்..
"சார் வாணி தான் கடைசியா போனாங்க "என்றான் வாட்ச்மன்
"வாணி இங்கே வாங்க "என்று அவளை அழைத்து விசாரித்தான் ,அப்போது அவளே ஒப்பு கொண்டாள், "சாரி சார் ரவி ங்ரவர்கிட்டெ சாதனா எதோ பிரெச்சனை பண்ணிருக்க அதான் அவர் தான் என்னக்கு காசு கொடுத்து இதை செய்ய சொன்னார் ",என்று அழுதாள்..
"வாணி நீங்க இப்படி பண்ணலாமா சே",என்று முகம் சுளித்தான்..
"சாதனா நீங்க பத்திரமா இருங்க அந்த ரவி உங்களை என்ன வேணாலும் செய்யலாம் நான் பாத்துக்குறேன்",என்று தைரியம் சொன்னான்..
"நன்றி சார் ",என்றாள்..
"வாணி உங்களுக்கு வேலை இங்கே இல்ல நீங்க போகலாம்",என்றான் பிரசாத் ஆவேசமாக..
"சார் ப்ளீஸ் இனி நான் இப்படி செய்ய மாட்டேன் மன்னிச்சுடுங்க", என்று வாணி கதறினாள்..
சாதனா இடை மறித்தாள்"பிரசாத் சார் ப்ளீஸ் விட்டுருங்க வாணி பாவ்வம் இந்த ஒரு தடவ மன்னிசுடுங்க ", என்று அவளுக்காக பரிந்து பேசினாள்..
பிரசாத் சட்டென நிமிர்ந்தான் சாதனாவுக்கு எவ்வளவு பெரிய மனசு என்று அவன் மனம் அவளை அந்த நொடியில் ஆழமாய் நேசிக்க தொடங்கிவிட்டது ..
அவளை ஆச்சரியமாய் பார்த்தவாறே ,"சரி சாதனா .."என்றவன் வாணியிடம் திரும்பி "சரி இந்த தடவை ,மன்னிக்கிறேன் இனி இப்படி செய்யாதே ",என்றவன் அவன் அறைக்கு சென்றுவிட்டான்..
சாதனா வாணியிடம் இருந்த அந்த file ஐ வாங்கி கொண்டு ,பிரசாத்தின் அறைக்கு சென்று கொடுத்தாள், அவளுடைய இடத்திற்கு செல்வதற்காக திரும்பி நடந்தாள் ஆனால் அவள் மனம் அவன் அவளை ஒரு வார்த்தை திட்டி விட்டானே என்று வலியால் துடித்தது..
யார் திட்டினாலும் தவறு அவள் மேல் இருந்தால் அமைதியா இருப்பாள் இல்லாவிட்டால் வெலாசி கட்டிவிடுவாள்.. ஆனால் இன்று அவள் மனம் வலித்தது ...
இரவு தூக்கம் கூட வரவில்லை , அவன் திட்டியதை நினைத்து மனம் வருந்திக் கொண்டிருந்தது .. அவனை எவ்வளவு தான் திட்டி வெறுப்பதாக நினைத்தாலும் அவனை வெறுக்க முடியவில்லையே , என்ன இது சோதனை என்று யோசித்துக் கொண்டே உறங்கிபோனாள்..
மறு நாள் காலை அலுவலகத்துக்கு கிளம்ப எழுந்தாள் தடுமாறி பெட்டில் விழுந்தாள் சஞ்சு பதறி ஓடி வந்தாள், "என்னாச்சு டீ, "என்று அவளை தாங்கி பிடித்தாள்..
"ஒன்னும் இல்ல டீ கொஞ்சம் உடம்பு பாரமா இருக்கு . நீ ஆபீஸ் கிளம்பு",என்றாள்
"ஹே என்ன டீ உன்ன இந்த நிலைமைல விட்டுட்டு நான் போவேனா.? ஒழுங்கா என்னுடன் ஹாஸ்பிடலுக்கு வா "என்று அதட்டினாள்..
"சஞ்சு நீ போ நான் ரெஸ்ட் எடுத்தா சரி ஆய்டும் , நீ போகாட்டி நான் சாப்பிடமாட்டேன் நானும் ஆபீஸ் கிளம்பி போவேன் ",என்றாள்..
இதை தவிர்க்க முடியாதவளாய் ,சரி என்று, அவளுக்கு சாப்பாடு, மாத்திரையும் குடுத்துவிட்டு கிளம்பினாள்..
சாதனாவின் ஆபீசுக்கு போன் போட்டு அவளுக்கு லீவ் சொல்லிவிட்டாள்..
மதியம் சாதனா எழும்பி நிற்பதற்காக நிற்க முயன்றாள், முடியாமல் விழப்போனால் அவளை ஒரு கரம் தாங்கி பிடித்தது அவள் அந்த கரத்தை பற்றி பிடித்து யாரென திரும்பி பார்த்தாள் தூக்கி வாரி போட்டது அவளுக்கு , அங்கே அவளை தாங்கி பிடித்தது 'பிரசாத் '..
"பிரசாத் நீங்க இங்கே .?"என்று விழித்தாள்.. அவளை படுக்க வைத்தவன் ..
அவள் அருகில் அமர்ந்துக் கொண்டு "சாது நீ இன்னைக்கு உடம்பு முடிலன்னு லீவு எடுத்த சொன்னங்க அதான் ,உன்னை கவனிக்க யாரும் இல்லன்னு தெரிஞ்சு ஓடிவந்தேன் ",என்றான் கண்களில் காதல் மின்ன..
சாதனா ஆச்சரியமாய் பார்த்தாள் "நீங்க ஏன் எனக்கு யாரும் இல்லன்னு கவலை படனும் நான் பாத்துக்குறேன் நீங்க போங்க .. என்னை பற்றி கவலை படத்துக்கு நன்றி ", என்றாள் ..
பிரசாத்துக்கு மனம் வலித்தது "சாது ப்ளீஸ் உன்ன விட்டு என்னால போக முடியாது . நீ என் மனைவி டீ "என்றான் கோவத்துடனும், காதலுடனும்..
"பிரசாத் .. நான் உங்க மனைவியா என்ன ஜோக் இது ப்ளீஸ் இப்படிலாம் என்கிட்டே பேசாதீங்க கிளம்புங்க ",என்றாள் மனதில் காதல் இருந்தும் மறைத்துக் கொண்டு ..
"முடியாது சாது , நான் உன்னை ஏமாத்த மாட்டேன் என்னை நம்பு .. உன்னை பார்த்ததும் என்னை நான் தொலைத்து விட்டேன் .. நீ இல்லாமல் எனக்கு வாழவில்லை .. நீயும் என்னை காதலிக்கிறாய் என்று எனக்கு தெரியும் மறைக்காதே",என்று கதறினான்..
அவளால் அதற்க்கு மேல் அவன் மேல் உள்ள காதலை மறைக்க முடியாமல் ,"உண்மைதான் பிரசாத் நானும் உங்களை காதலிக்கிறேன் , ஆனால் நீங்கள் என்னை கல்யாணம் செய்துக் கொள்ள முடியாமல் போனால் என்னால் தாங்கிக்க முடியாது ., என் பெற்றோரையும் இழந்து தனியா நிக்குறேன் இதுக்கு மேல எதையும் என்னால தாங்க முடியாது ",என்று அழுதாள்..
"நிச்சயமா நான் உன்னை கைவிடமாட்டேன் சாது .. believe me ",என்று அவளது கரங்களை பற்றினான் ,,.. அவள் அவன் கரத்தில் முகம் புதைத்து அழுதாள்..
அவளை சமாதனம் செய்து , டாக்டர்ஐ வரவழைத்தான் ,காய்ச்சல் தான் பலவீனமாய் இருக்காங்க வைட்டமின் டாப்லெட்ஸ் தரேன் அதை குடுங்க சேரி ஆய்டும் ,என்று கூறிவிட்டு விடை பெற்றார் .
ஆவலுடன் மாலை வரை இருந்து கவனித்துக் கொண்டான், "சாது நான் உனக்கு வீடு பாத்து தரேன் அங்கே இனி தங்கு உன் தோழி சஞ்சுவுடன் அங்கே இரு அப்போ நானும் உன்னை பார்க்க முடியும் இது லேடீஸ் ஹோச்டேல் ல ",என்றான்
,"சரி பிரசாத் பாருங்க சின்னதா இருந்தா போதும் ",என்றாள் அவன் பிரிய மனமில்லாமல் சென்றான்..
இரவு சஞ்சுவிடம் நடந்ததை சொன்னாள் சஞ்சு மிகவும் சந்தோசப்பட்டாள் சாதனாவுக்கு நல்ல வாழ்கை கிடைத்ததை நினைத்து .. சாதனா மகிழ்ச்சியுடன் தூங்கினாள்..
மறுநாள் காலை உடல் தேறியதால், ஆபீசிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்,
அப்போது அவளது போன் அலறியது ,"ஹெலோ ",
"ஹாய் சாது ",என்றான் பிரசாத் உற்சாகமான குரலில் ,
"ஹே பிரசாத் என்ன இது இவளவு சீக்கிரம் போன் பண்ணிருக்கீங்க , "என்றாள்
"அது என் அருமை தேவதையின் உடல் நிலை எப்படி இருக்குதுன்னு தெரிஞ்சுக்க தான் போன் பண்ணேன் "என்றான்
"ஹ்ம்ம் ம்ம்ஹ் ரொம்பதான் பாசம் பொழியுது ஐயாக்கு "என்றாள் கிண்டலாக
"என்ன டீ இப்படி சொல்லிட்டே உன்னை பார்த்த முதல் நாளே உன்மேல பாசம் அதிகமா வெக்க ஆரம்பிச்சுட்டேன் , எந்த பொண்ணு கிட்டயும் நான் இப்படி சுத்துனது இல்ல உன் பின்னால்தான் சுத்துறேன் பாசம் இல்லாமலா.?"என்றான் பாவமான குரலில்
சாது ,அவன் பாவமான பேச்சை கேட்டு சிரித்தாள்.. "சரி நான் பீசே வந்து பேசுறேன் , "என்று போன்ஐ அணைத்து விட்டு கிளம்பி ஆபீசிற்கு சென்றாள் ..
உற்சாகமாக வேலைகளில் ஆழ்ந்தாள் ,"சாதனா "என்று குரல் கேட்டதும் திரும்பினாள், பிரசாத் சொல்லுங்க .
"வீடு பார்த்துட்டேன் நாளைகே ஷிபிட் பண்ணிடலாம் ,3நு ரூம் டோடல்லா போதுமா "என்றான் தலையை சாய்த்துக் கொண்டு அழகாய்
அவள் அதை ரசித்தவாறே ,"போதும்ங்க சரி லஞ்ச்க்கு போகலாம் "என்றதும் இருவரும் சென்று சாபிட்டு விட்டு வந்தனர் .,மாலை இருவரும் சேர்ந்து சென்றனர் அவளை ஹாஸ்டலில் விடுவிடு அவன் சென்றுவிட்டான் , சஞ்சுவிடம் புதிய வீடிற்கு செல்வதற்காக ஏற்பாடுகள் செய்ய சொல்லிவிட்டு தானும் பொருள்களை அடுக்க தொடங்கினாள்..
மறுநாள் , புது வீடிற்கு பால் காய்ச்சி .ஹாஸ்டலை காலிசெய்து விட்டு சஞ்சுவும், சாதனாவும் பொருள்களுடன் புது வீடிற்கு வந்தனர் ..
ஒரு மாதத்திற்கு பிறகு, சாதனாவின் ஆபீசில் புது எம்.டி.குருபிரசாத் பதவி ஏற்க்கபோகிறார் என்பதற்காக வேலைகள் நடந்து கொண்டிருந்தது .. அனைவரும் எம்.டி யின் மகன் குருப்ரசாத் யாராக இருக்கும் வெளிநாட்டில் இருந்து படித்து முடித்து வர போகிறார் எப்படி நம்மிடம் பழக போகிறாரோ என்று பதற்றத்தில் இருந்தனர் ,, அலுவலக வளாகத்தில் அனைவரும் கையில் பூங்கொத்துடன் குருப்ரசாத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர் ,,
கார் வந்து நின்றதும் அனைவரும் ஆவலுடன் பார்த்தனர் .. காரை விட்டு இறங்கின குருப்ரசாத்தை பார்த்ததும் அனைவரும் வாய் அடைத்து நின்றனர் .. சாதனா குரு பிரசாதை பார்த்ததும் கோவத்துடன் முறைத்தாள் வந்திருந்தது "மேனேஜர்.பிரசாத் ,அவர் தான் குருபிரசாத் என்று எம்.டி சொன்னதும் அவ்வளவு தான் அவளுக்கு கோவம் தலைகேறியது , பிரசாத் மேனேஜர் என்று ஏமாற்றி தன்னை காதலித்து விட்டானே என்று கோவத்துடன் அழுகையும் சேர அங்கிருந்து நகர்ந்து தான் வீடிற்கு வந்து , படுக்கையில் விழுந்தாள்.. அவள் செல்வதை பிரசாத் கவனித்துவிட்டான் அவள் என்னை தவறாக புரிந்து கொண்டாலே அவளை சாமாதான படுத்த வேண்டும் என்று பதவிஏற்க்க சென்றான் ..
சாதனாவை சஞ்சு சமாதன படுத்திக் கொண்டிருந்தாள் "சாது சொன்ன கேளு அவரு எதாவது காரணத்தோட தான் செஞ்சுருபாறு உனக்கு வசதியானவங்க மேல நம்பிக்கை இல்லை என்பதற்காக எல்லோரையும் சந்தேக படாத அவரு நல்லவர் தான் டீ . "
"இல்ல சஞ்சு அவரு செஞ்சது தப்பு என்னை சீட் பண்ணிட்டாரு என்னை உண்மையா காதலிக்கல"என்று அழுது புலம்பினாள் ..
"ஹே நிறுத்து டீ "என்று ஆவேசமாய் வந்த குரலின் பக்கம் 2ருவரும் திரும்பி பார்த்தனர் பிரசாத் நின்று கொண்டிருந்தான் , சஞ்சு வெளியே வந்துவிட்டாள்..
பிரசாத் சாதனாவின் அருகில் வந்து ,"இங்கே பாரு நான் உன்னை ஏமாதுல உன்னை உண்மையா நேசிக்கிறேன் புரிஞ்சுக்கோ , நான் நம்ம கம்பனியில் நடக்குற திருட்ட கண்டு பிடிக்கதான் இப்படி மேனேஜர் மாறி நடிச்சேன் என்ன புரிஞ்சுக்கோ .. உன்னை நான் கல்யாணம் செஞ்சுகுரத பத்தி இத்தனை நாள் பேசாததற்கு காரணம் நான் எம்.டி யாய் பொறுப்பு ஏற்கத்தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கறத பத்தி என் வீட்ல பேசுறேன் .. நாளைக்கு நல்ல முடிவோட வா ", என்று சொன்னவன் சட்டென்று வெளியேறி காரை வேகமாய் கிளப்பினான்..
சாதனா யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்..
காலையில் அலுவலகத்திற்கு சென்றதும் பழைய எம்.டி சாதனாவை குரு பிரசாதிற்கு பி.எ வாக நியமித்திருப்பதை சொன்னார் . அவரிடம் எதையும் வெளிக் காட்டி கொள்ளாமல் , நன்றி என்றபடி பிரசாத்தின் அறையை நோக்கி நகர்ந்தாள் ..
"வா சாது "என்றான். "என் அறை எங்கே? உங்க அப்பாவிடம் சொல்லி பி.எ வாக ஆகிடீங்க போல " என்றபடி அவன் அறையை காட்ட அவள் அவளின் அறைக்கு சென்று கடிதம் எழுதினால் அதை முடித்ததும் பிரசாத்திடம் வந்து நீட்டினாள்.. 'அவன் பிரித்து படித்ததும் அதிர்ந்தான், "என்ன சாது இது ? ராஜினாமா பண்றே நு எழுதிருக்கே ? உன்னை நான் என்ன செஞ்சேன் நீ என்னை விட்டு அவ்வளவு சுலபமா போக விடமாட்டேன் .. நீ இல்லாமல் நான் இல்லை டீ.. என்னை வெறுத்து விடாதே டீ . நான் உன்னை என் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன் "என்று அழாத குறையாய் சொன்னான்..
"எனக்கு கல்யாணம் ஆக போகுது இனி நான் வேலை பார்க்க முடியாது என் கணவனை கவனிசுகனும் சோ வொர்க் பாக்க முடியாது சார் "என்றாள் இயல்பாய்
அவன் கண்ணில் மின்னல் வெட்டியது "சாது அப்போ கல்யாணத்துக்கு சம்மதிகிறாயா? ரொம்ப நன்றி சாது "என்று ஆனந்த கூச்சலிட்டான் ..
அவள் வெட்கத்துடன் தலை குனிந்தாள்..
அவன் அவளை பார்த்து ,"அடி என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்து விட்டேன் அது எந்த இடம் தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன் உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று உந்த காலடி தேடி வந்தேன் காதல் என்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை கண்டதும் கண்டு கொண்டேன் "என்று பாடினான்...
சாதனா அவனை காதலுடன் பார்த்து ,"போதும் உங்க பாட்டும் கொஞ்சலும் ".,என்று புன்னகைத்தாள்.. அவன் அவளை பார்த்து கண்ணடித்து,"என் பாடு பிடிக்கலியா?"என்றான் .. "அப்படி இல்ல பிரசாத் நீங்க அழகா பாடுறீங்க"..
கல்யாணத்துக்காக அன்று மாலை அவன் பெற்றோருடன் பேசி சம்மதிக்க வைத்தான் .. அவர்களுக்கும் சாதனாவை பிடித்திருந்தது.. சாதனாவும், சஞ்சுவும் ரொம்ப சந்தோசபட்டார்கள்.. சஞ்சு தன் தோழிக்கு அமைந்த நல்ல வாழ்கையை பற்றி மிக சந்தோசப்பட்டாள் .. திருமணமும் இனிதே நிறைவேறியது..
திருமணம் முடிந்த ஒரே நாளில் பிரசாத்தின் வீட்டில் சாதனவையும் அவனையும் தேன்நிலவுக்கு 'கொடைக்கானலில் இருந்த அவர்களது யெஸ்டேட் பங்களாவிற்கு 'அனுப்பினார்கள்.. சாதனாவும், பிரசாத்தும் கொடைக்கானலில் இருந்த அவர்களது பங்களாவை அடைந்தனர்..
அவர்கள் எதிர்பாராத திருப்பங்கள் அவர்கள் வாழ்வில் வர இருப்பதை அறியாமல் அந்த பங்களாவிற்குள் நுழைந்தனர்..
"பிரசாத் நான் முதன் முறையாய் இங்கே வந்துருக்கேன் அதனால் முதலில் பால் காய்ச்சி பாயசம் செய்யனும் இருங்க வரேன் ",என்றவள் அடுப்பறைக்குள் நுழைந்தாள்.. அது நல்ல மாடர்ன் ஆகா கட்டப்பட்டு இருந்தது அவளுக்கு மிகவும் பிடித்து போனது.. பால் காய்ச்சும் போது பால் தீஞ்சு போய்விட்டது அவள் மனம் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்த்தியது பாயசம் செய்து சாமிக்கு படைபதர்க்காக சாமி அறைக்குள், அவனுடன் நுழைந்தாள் ,
அவள் பாட ஆரம்பித்தாள் ,"காக்க காக்க கனகவேல் காக்க ", அவ்வளவுதான் அவள் பாடியிருப்பாள் , அதற்குள் சமயலறையில் பாத்திரங்கள் தடார் தடார் என விழ ஆரம்பித்தது, அவள் பாட்டை நிறுத்திவிட்டு , சமயலறைக்கு ஓடினாள், அவனும் அவளை பின் தொடர்ந்து சென்றான்..
எல்லா பொருட்களும் சிதறி கிடந்தன அங்கே.. சாதனா நடுங்கி போனாள்..
பிரசாத் அவள் தொலை தொட்டும் அவள் பயந்து அலறிவிட்டாள், "ஹே என்ன சாது ஏன் இப்படி அலறுற நான்தான், "என்று சமாதனம் செய்தான். அவள் பயத்தை விட்டு வெளியே வரவில்லை , வார்த்தைகள் தடுமாற அவனிடன் சொன்னாள்.,"இல்ல எதோ தப்பு இருக்கு இங்கே பால் கூட தீஞ்சு போச்சு, சாமிகும்புடுரபோ இப்படி பாத்ரம் உடையுது ",
"ஹே நான் இங்கே எதனை முறை வந்துருக்கேன் இங்கே ஏதும் நடந்தது இல இப்படிலாம், அது பூனை தட்டிவிட்டு இருக்கும்.. பயபடாதே ",
"இல்ல இதனை நாள் இல்லாம இருக்கலாம் ஆனா இப்போ எதோ விபரீதம் நடக்க போகுது ", .
அவன் அவள் பயந்து இருக்கிறாள், என்று ஆறுதல் சொல்லி வெளியே அழைத்து சென்றான் .. இரவு வீடு திரும்பியதும் சாப்பிட்டுவிட்டு , தூங்க சென்றனர் ,
"பிரசாத் எனக்கு என்னமோ உடம்பு சரில்லாத மாறி இருக்கு .. "என்றாள்
அவன் தொட்டு பார்த்து , "ஆமாம் காச்சல் ரொம்ப இருக்கு ஏன் திடிருன்னு உடம்பு சரில்லாம ஆச்சு.?", "நீ பயந்துருப்ப காலையில் நடந்ததை நினைத்து, இரு டாப்லெட் தரேன் , "என்று அவளுக்கு மாத்திரைகளை தந்து படுக்கவைத்தான்..
காலையில் அவளுக்கு உடம்பு ஓரளவு தேறிஇருந்தது ,.. பிரசாத் அவள் எழும்பும் முன்னமே எழும்பி அவளுக்கு காபி போட்டு கொண்டுவந்து அவளை எழுப்பினான் .. "பிரசாத் நீங்க ஏன் இது எல்லாம் செய்றீங்க ", என்று அவள் எழுந்தாள்..
"ஹே நான் செய்யாம யாரு செய்வா.. இந்தா குடிச்சுட்டு குளிச்சுட்டு வா , 'ரமணி ' சாப்பாடு செய்துவிட்டாள், சாப்பிடலாம் "
அவள் காபியை வாங்கி குடித்து விட்டு குளித்து வந்தாள்,. இருவரும் dinning haal கு சென்று அமர்ந்தனர், சாப்பிட்டு முடிந்ததும் .. அவள் அறைக்கு சென்றுவிட்டால், அவனும் அவளை தொடர்ந்து சென்றான் ..
அவளுக்குள் எதோ சட்டென்று உள்ளே புகுந்தது போல் இருந்தது அவனை திரும்பி முறைத்தாள்.. அவன் அவள் முறைப்பதை பார்த்து "ஏன் டீ முறைகுரே எனாச்சு?", என்றான் இயல்பாய்..
"நான் என்னவோ செய்வேன் உங்க வேலையே பாருங்க.",என்று கத்தினாள்.. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை இதுவரை அவனை அப்படி திட்டியதில்லை இப்போது ஒரு விசயமும் இல்லாமல் திட்டுராலே என்று எண்ணினான். "எதுக்கு இப்போ கோவபடுரே நான் என்ன செஞ்சேன்.. ?"
"எனக்கு உன்னை பார்தலே பிடிக்கல என் மூஞ்சில முழிக்காதே போ ", என்றாள் சப்தமாய்..
அவன் சற்று திடுகிட்டான், "என்ன டீ ஆச்சு உனக்கு நல்லாதானே இருந்த சாது ? ",
அவள் பலமாய் வீடே அதிரும்படி சிரித்தாள், "நான் நான் சாதனா வா.? முட்டாள் நான் சாதனா இல்ல 'தேவி' என்னை மறந்து நீ சாதனவை திருமணம் செய்து கொண்டாய் , அதை என்னால் தடுக்க முடில ஆனால் , நீ சாதனவுடன் வாழ்வது நடக்காத காரியம் , 'அர்ஜுனா'", என்றாள் ஆவேசமாய்..
"ஹே சாதனா விளையாடாதே ஒழுங்கா இரு ",
"நான் சொல்லிடே இருக்கேன் நீ சாதனா என்கிறாய் , அர்ஜுனா நான் உன் தேவி என்னை மறந்தது ஏன்? என்னை மறக்க உன்னால் எப்படி முடிந்தது அர்ஜுனா?",என்று கதறினாள்..
அவன் ஒன்றும் புரியாதவனாய் "நான் அர்ஜுனா இல்ல , பிரசாத்.. நீ தேவி இல்ல சாதனா புரியுதா.. விளையாட்டு போதும் ".. என்றான் கோவத்துடன்
"அர்ஜுனா என்னை உன் வார்த்தைகளால் கொல்லாதே நான் உன் தேவி .. இப்போது நிரூபிக்கிறேன் பாரு ",என்றவளின் உருவம் முற்றிலும் மாறியது .
அவன் அவளையே பார்த்தான் அந்த உருவம் பழங் காலத்து , ராணிகள் அணியும் உடையில் இருந்தது , மிக அழகாக இருந்தால் அந்த பெண், அவளை எங்கேயோ பார்த்த ஞாபகம் பிரசாத்திற்கு , திணறினான்..
"நீ.. நீ .?/"
"நான் தான் உன் தேவி என்று சொன்னேனே.. "..என்றாள்
"இல்லை நீ யாரோ என் சாதனா எங்கே .. சாதனா சாதனா " ,
"இனி உன் சாதனா உனக்கு மனைவி இல்லை புரியுதா நான்தான் உன் மனைவி ",என்று அந்த பெண் சிரித்தாள்..
அவனுக்கு அங்கே நடப்பது ஆச்சரியமாய் இருந்தது அந்த பெண் சாதனா உன் மனைவி இல்லை என்றதும் அவனுக்கு கோவம் வந்து தான் என்ன செய்கிறோம் என்று புரியாமல் அங்கே அலங்காரத்துக்காக வைக்க பட்டிருந்த ராஜாவின் வாள் போன்று இருந்த கத்தியை சட்டென உருவி அவள் கழுத்தில் வைத்தான் ..
அந்த பெண் அசராமல் நின்று கொண்டே சிரித்தாள்.. பிரசாத்திற்கு எதோ புகை மூட்டமாய் தெரிந்தது அவனுடைய , முந்தைய ஜென்ம ஞாபகங்கள் தோன்றின ..
அவன் குதிரையில் சென்று கொண்டிருந்தான் அந்த காலத்து உடையில் இருந்தான்.. அப்போது ஒரு பெண்ணிடம் யாரோ தகராறு செய்வது தெரிந்து குதிரையை நிறுத்தி கீழே இறங்கினான்.. அந்த கயவர்களை அடித்து துவைத்து விட்டான் .. அந்த பெண் அவனிடம் நன்றி தெரிவித்தாள்..
"நான் தேவி மித்ரா நாட்டு இளவரசி .. என் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தனியே வந்துவிட்டேன் அப்போதுதான் இவர்கள் என்னை வழிமறித்து தகராறு செய்தார்கள். ",என்றாள் அழகிய பாவனையுடன்
அவன் அதை ரசித்தபடி ,அவளை பார்த்து ,"நான் அர்ஜுனன் .. அண்டைய நாட்டு தளபதி .. தங்களை சந்தித்ததில் மிகுந்த சந்தோஷம் ",என்றான் ..
அவள் அவனை பார்த்ததும் அவன் கம்பீரமான தோற்றத்திலும், அவன் வீரத்திலும் மயங்கினாள்..
"தங்கள் வீரத்தை கண்டு தலை வணங்குகிறேன்.. "என்றாள்.
"சரி நான் சென்று வருகிறேன் தேவி அவர்களே.. மீண்டும் சந்திப்போம் "
"எப்போது என்று சொல்லாமல் சென்றால் எப்படி தளபதியாரே"என்றாள்..
அவன் அவளை குறும்பாய் பார்த்தான் , "நாளை இதே இடத்தில் இதே நேரத்தில் "என்றவன் அவளை பார்த்துக் கொண்டே குதிரையை கிளப்பினான் ..
அடுத்த நாள் , அதே நேரத்துக்கு தேவி அங்கே அவனுக்காக காத்திருந்தாள்.. அவனும் வந்தான்..
"என்ன தேவி வெகு விரைவில் வந்துவிடீர்களா.? என்னை காண அவ்வளவு ஆவலா தங்களுக்கு .?"என்றான் அவளை ஏறிட்டு.
அவள் தலை நிமிர்ந்து அவனை பார்த்தாள்.. "ஆமாம் அர்ஜுனா .. தங்களை காண எந்த பெண்ணுக்குத்தான் ஆவல் இருக்காது .. உங்கள் கம்பீரம் ,வீரம் போதுமே எல்லோரையும் வசீகரிக்க.. "என்றாள் அவன் கண்களை சந்தித்து
அவன் அந்த சந்திப்பில் சற்று தடுமாறினான்.. என்னை பிடித்து இருக்கிறது என்று இப்படி சாதூரியமாய் சொல்கிறாளே என்று வியந்தான்.. "தேவி என்னை தங்களுக்கு பிடித்து இருக்கிறதோ .? எந்த வகையில் ",
"தங்களுக்கு மனைவி என்னும் வகையில் ",என்று சிரித்தவாறே சொல்லி கொண்டு திரும்பி ஓட கால் எடுத்தாள்.. அதற்குள் அவன் வாள் அவள் கழுதை வளைத்தது.. "என்ன இது விளையாட்டு "என்றாள்
"அவன் அவள் காதில் சொன்னான், "என் மனதை கொள்ளை அடித்துவிட்டாய் உன் கழுத்தில் கதியை வைத்தேன் உன்னை சிறை பிடிக்க ", என்றான் வசீகரிக்கும் புன்னகையுடன் .. கழுத்தில் வைத்திருந்த கத்தியை எடுத்தான் , அவள் அவன் பக்கம் திரும்பி , "தாங்கள் என்னை ஏற்று கொண்டீர்கள .? எபோது என்னை பெண் கேட்டு வருவீர்கள் "என்றாள் ஆவலுடன் ..
"அவ்வளவு பிடிதிருகிறதா என்னை .. அடுத்த வாரம் வருகிறேன் உன்னை பெண் கேட்டு என்றான்.. " இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றனர் ..
ஒரு வாரத்திற்கு பின், அவன் அவன் நாடரசனின் சமததுடனும், வீட்டின் சமததுடனும் தேவியை பெண் கேட்டு மித்ர நாட்டுக்கு சென்றான்.
யாரும் தன்னுடன் வேண்டாம் என்று கூறிவிட்டு தன் வீட்டில் உள்ள நபர்களுடன் மட்டும் சென்றான் .
மித்ர நாடு அரண்மனையில்..
முன்னமே தேவி அவன் வருகையை அறிவித்திருந்தாள், அனைவரும் ஏற்றுக் கொண்டனர் இந்த வரனை.. அர்ஜுனனை வரவேற்று நன்கு உபசரித்தனர்..
அர்ஜுனன்னுக்கு அரண்மனையை சுற்றிக் காட்ட பணியாள் ஒருவன் சென்றான் . ஒரு அறைக்குள் அர்ஜுனன் நுழைந்ததும், அங்கே 10து பேர் வாளுடன் அவனை தாக்க முன்வந்தனர் அர்ஜுனன் சுதாரித்துக் கொண்டான் . இதில் இருந்த வாழை எடுத்து அவர்களை தாக்கினான்..
தேவி தன் தந்தை அமைச்சருடன் பேசுவதை கேட்டாள் .
"அமைச்சரே இந்நேரம் அர்ஜுனனை நம் ஆட்கள் தாக்கி இருப்பார்கள் "என்று வஞ்சனையாய் சிரித்தார்..
"ஆமாம் அரசே நம் நாட்டு இளவரசியை அவன் மணப்பதா? அது தகுமா?"என்றார்..
தேவி திடுகிட்டாள்.. நம் தந்தை இவ்வளவு நயவஞ்சகனா ? அர்ஜுனனை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி அவசரமாய் அவன் இருந்த இடத்திற்கு ஓடினாள் ... அங்கே அவன் சண்டை போட்டு கொண்டிருந்தான் .. அவனை யாரோ தாக்க வாளெடுக்க இவள் காப்பாற்றும் எண்ணத்துடன் சென்றாள்.. அனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விபரீதம் நடந்தது ..
அர்ஜுனனை தாக்க வந்ததை அவன் உணர்ந்தவனாய் அந்த ஆளை தாக்க வாளை கழுதை நோக்கி வீசினான் , தேவி இடையே வந்ததால் அவள் கழுத்தை அந்த வாள் பதம் பார்த்தது.. அர்ஜ்ணனும் அங்கு இருந்த அனைவரும் மிரண்டனர்.. அர்ஜுனன் ஓடி வந்து அவளை தன் மடியில் கிடத்தினான்.
"தேவி நான் தெரியாமல் செய்து விட்டேன் நீ என் இடையே வந்தாய்.. என் உயிரே என் கையாலேயே உன்னை கொன்று விட்டேனே நான் பாவி.. எனக்கு மணிப்பி கிடையாது." என்று புலம்பினான்..
அவள் அவன் வாயை தன் அழகிய விரல்களால் மூடினாள். "அப்படி சொல்லாதீங்க நான்தான் இடையே வந்தேன் தங்கள் மேல் எந்த தவறும் இல்லை தங்களை காப்பாற்ற என் உயிரை தந்ததை நான் பெருமையாய் கருதிகிறேன் என் தந்தை தங்களையும் என்னையும் வஞ்சித்து விட்டார்.. தாங்கள் அன்றைக்கு விளையாட்டுக்காக என் கழுத்தில் வைத்த வாள் இன்று அதே வாளால் என் உயிர் பிரிய போகிறது இது எவ்வளவு பெரிய பாக்கியம் அர்ஜுனா.. உன்னை நான் அடுத்த ஜென்மத்திலாவது அடைவேன் அர்ஜுனா.."என்று தடுமாறி சொன்னாள்..
"இல்லை இந்த ஜென்மத்திலே நான் உன்னுடன் தான் இருப்பேன் நீ மட்டும் என்னை விட்டு எங்கே போகிறாய் நானும் உன்னுடன் வருகிறேன் "என்றவன் அருகில் அவள் கழுத்தை பதம் வாள் கிடந்தது அதை எடுத்து அவனே அவன் கழுதை அறுத்துக் கொண்டான்..
தேவி அதிர்ந்து போனாள் , "தங்கள் காதலை நினைத்து பெரும... "முடிபதர்க்குள் அவள் அவன் மடியில் பிணமாய் சாய்ந்தாள். அவனும் அவள் மேல் பிணமாய் முகம் தாழ்ந்தான்.. இதை பார்த்து தேவியின் தந்தையும் , மற்றவர்களும் வருந்தினர்..
பிரசாத் நிகழ் காலத்துக்கு நினைவிகளை திருப்பினான் , இன்றும் அதே போல் அவள் கழுத்தில் கதியை வைத்திருந்தான் பதறி அதை தூர எறிந்தான்.. அவளை பழைய காதலுடன் பார்த்தான்.. உணர்ச்சிவசப்பட்டு , அவள் கைகளை பற்றினான்..
"தேவி என்னை மன்னிச்சுடு .. நான் உன்னை கொன்றுவிட்டேன் .. உன்னை மறந்து நான் சாதனாவை திருமணம் செய்து கொண்டேன் ", என்று கதறினான் ..
தேவி அவனை அன்பாய் பார்த்தாள்.. , "அன்றே உங்களிடம் சொன்னேனே தங்கள் வாளால் இறந்தது என் பாக்கியம் என்று .. என்னை மறந்து இப்பொது ஞாபத்துக்கு கொண்டு வந்துவிடீர்கள்.. இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது.. ", என்றாள் அவன் தோள் சாய்ந்து..
அவன் பதறி அவளை விட்டு விலகினான், "தேவி நம் காதல் உண்மை அதற்காக நீ என்னிடம் இதை திருமணதுக்கு முன் கூறியிருந்தால் நான் சாதனவையோ இல்லை வேறு ஒரு பெண்ணையோ திருமணம் செய்திருக்க மாட்டேன் ஆனால் சாதனா என்னை நம்பி வந்தவள் அவளை கைவிட்டா அது மகா பாவம் ", என்றான் ..
தேவிக்கு அவன் மெது கோபம் எரிமலையாய் வெடித்தது, "இனி உங்களிடம் பேசி பயனில்லை.. நீங்கள் என்னக்கு மட்டும் தான் சாதனவை கொன்றுவிட்டால் நீங்கள் என்னுடன் வாழ்வீர்கள் இல்லையா .? அவளை கொள்ளாமல் விடமாட்டேன். ",என்று கத்திவிட்டு , சாதனாவின் உடலை விட்டு வெளியேறினாள், தேவி..
சாதனா என்ன நடந்ததென்று அறியாதவளாய் மயங்கி வீழ்ந்தாள்.. அவளை தாங்கி படுக்கையில் கிடத்தினான்.. அவளை பாவமாய் பார்த்தான், "என்னை நம்பி தாலி வாங்கியவள் இவளை நான் எப்படி விடமுடியும்.. என்னால் முடியாது என்னதான் இருந்தாலும் தேவி எனக்காக உயிரை கொடுத்தவள் அவளை மறக்க கூடாது , அதற்காக என் மனைவியை விட்டுவிடவும் கூடாது சாதனாவை காப்பாற்ற வேண்டும் ", என்று யோசித்து கொண்டிற்கும் போதே அவள் விழித்தாள்..
"பிரசாத் என்னாச்சு ?" என்றாள் ஏதும் அறியாத சிறு பிள்ளையை போல் ..
"நீ மயங்கிட்ட உடம்பு சரில்ல டா உனக்கு .. ரெஸ்ட் எடு "என்று அவள் தலையை கோதினான்..
"ஹ்ம்ம் நீங்க என் டென்ஷன் அஹ இருக்கீங்க ?"
"ஒன்னும் இல்ல டா .. கொஞ்சம் டையர்டா இருக்கு அவ்ளோதான் "
"சரி நீங்களும் ரெஸ்ட் எடுங்க "என்று அவள் கண்களை மூடிக் கொண்டாள்..
அவனும் உறக்கம் விரும்பி படுத்தான் , ஆனால் அவன் மனம் சஞ்சலத்தில் இருந்ததால் உறக்கம் வராமல் தவித்தான்..
காலை விடிந்ததும்.. குளித்துவிட்டு இருவரும் அமர்ந்திருந்தனர்..
பிரசாத் , சாதனாவிடம் நடந்தை சொன்னான் .. அவளால் நம்ப முடியவில்லை , நம்பாமலும் இருக்க முடியவில்லை ..அழ தொடங்கினாள்..
பிரசாத் பதறி அவளை சமாதனம் செய்ய முயன்றான்.. "பிரசாத் நான் உங்களை இழந்துருவேனா? "என்று கதறினாள் ..
"ஹே அசடு உன்னைவிட்டு என்னால் மட்டும் இருக்க முடியுமா என்ன .? தேவி என்ன காதலியாய் இருந்தாலும் உன்னை மணந்து கொண்ட பின் உனக்கு பிறகு உன்னக்கு பின் தான் அவளும், மற்றவர்களும்.. உன்னை நான் பிரிய மாட்டேன் "என்று வாக்களிதான் .. அதை தேவி பார்த்து கொண்டுதான் இருந்தாள் கோவம் தலைகேறியது அவளுக்கு ..
"சாதனா நான் கொஞ்சம் வெளிய போயிடு வரேன் வேலை இருக்கு ஹாப் அன் ஹௌஅர் ல வந்துருவேன் "என்று கிளம்பினான் ..
சாதனா தனியாய் அறையில் இருந்தாள் , அவள் படுத்து உறங்கினாள்.. திடீரென்று யாரோ அவள் கழுத்தை பிடிப்பது தெரிந்து முழித்தாள்.. யாரும் அங்கே இல்லை ஆனால் யாரோ அவள் கழுத்தில் கை வைத்து அழுத்துவது உணர முடிந்தது .. கத்தினாள் .. அவள் வீடு வேலையாள் ரமணி ஓடிவந்தாள் .,
"அம்மா என்ன ஆச்சு "என்று அவளை நெருங்கினால் , ரமணி கதவுக்கு வெளியே தானாக தள்ளபட்டாள்.. ரமணிக்கு பயம் தொற்றிக் கொண்டது .. உடனே பிரசாத்துக்கு போனே செய்து நடந்தை சொன்னாள்.. அவன் கிளம்பி வருவதை கூறினான்..
சாதனா , "காக்க காக்க கனகவேல்...",என்று கவசம் சொல்ல தொடங்க மேலும் அவள் கழுத்து இருக்கபட்டது.. சாதனா விடாமல் சொன்னால் அதற்க்கு மேல் தேவியால் அதை கேட்க்க முடியாமல், கழுதை விட்டாள்..
ரமணி சதனாவுக்கு எழுந்து உட்கார உதவி செய்தாள்..
அதற்குள் பிரசாத் வந்துவிட்டான்.. சாதனா என்று அவளிடம் ஓடி வந்தான்..
சாதனா அழுதுக் கொண்டே அவனை பார்த்தாள், "என்னங்க ஏன் நம் வாழ்கை இப்படி நரமாகி போனது என்னால் தாங்க முடில நான் செத்துட்டா நீங்களும் சந்தோசமா இருப்பீங்க ".. பிரசாத் அவளை மனம் உருக பார்த்தான்.. "அப்படி சொல்லாதே .! நீ என்ன செய்வ நான் பழசை மறந்ததுகு அதுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் "..
"இப்படியே விடமுடியாது பிரசாத் சஞ்சு கிட்டே சொலுவோம் அவ எதாச்சும் உதவி பண்ண முடியுதா பாப்போம்."என்றவள் தன் போன்ஐ எடுத்து சஞ்சுவை அழைத்தாள், நடந்ததை சொன்னாள்.. சஞ்சு கிளம்பி வருவதாய் கூறினாள்.. இது சாதனவுக்கு ஒரு நிமதியை தந்தது ..
மறுநாள் சஞ்சு கொடைகானல் வந்துவிட்டாள்.. சாதனா என்று அவளை கட்டிக் கொண்டாள்..
சாதனா அவள் தோளில் சாய்ந்து அழுதாள்.. "ஹே அழுகாத டீ சாது ஒன்னும் இல்ல இத எப்படி சரி செய்ய முடியும்னு நான் யோசிச்சுட்டு தான் வந்துருக்கேன் ", என்றதும் சாதனா நிமதியுடன் நிமிர்ந்து சஞ்சுவை பார்த்தாள்..
"என்ன டீ யோசனை அது சீக்கிரம் சொல்லு "என்று பரபரத்தாள்..
"ம் சொல்றேன் டீ இந்த மந்திரவாதிலாம் வேண்டாம் இப்போ , தேவிக்கு பிரசாத் மேலதான் பாசம் அவன் பேசினாதான் எல்லாம் செரியாகும் .. பிரசாத் அவளுக்காக சண்டை போட்டு காப்பதினது, உயிரை விட்டது, இதை எல்லாம் சொல்லி தேவியின் எண்ணத்தை மாற்ற ஓரளவுக்கு வைப்பு இருக்குது.. தேவி பிரசாத் சந்தோசமாக இந்த ஜென்மத்தில் ஆவது வாழட்டும் நீ அவரை உண்மையை நேசித்தால் இதை கண்டிப்பை செய்வாய் என்று புரியவைப்போம்.. அவள் பழிவாங்க துடிக்கவில்லை அதனால் அவள் இதை ஏற்றுக் கொள்வாள்.. "என்று சஞ்சு கூறியதும் பிரசாத்துக்கும் சாதனவுக்கும் நல்ல யோசனை என்று தோணியது..
அனைவரும் அமர்ந்து சாப்பிட்டதும் பேசிக் கொண்டிருந்தனர் .. அப்போது தேவி அங்கே வந்து நின்றாள்.. சஞ்சுவுக்கு அவளை பார்த்ததும் புரிந்து விட்டது .. இவள் தேவி இவள் தான் என்று ..
அனைவரும் கலக்கத்துடன் அவளை ஏறிட்டனர்.. தேவி சாதனாவை பார்வையாலே எரிப்பதை போல் பார்த்தாள் ., ஆனால் அந்த பார்வையின் கனல் சாதனாவின் உடம்பு பற்றி எறிவது போல் எரிச்சல் ஏற்பட்டது சாதனா துடித்து அலறினாள் .. பிரசாத்தும் , சஞ்சுவும் பதற்றமாய்.., அவளை தாங்கி பிடித்தனர் , "சாது என்ன ஆச்சு மா.? ஏன் இப்படி அலறுற "என்றனர் இருவரும் ..
தேவி சிரித்தாள் ., நான் அவளை பார்வையாலேயே எரித்தேன் அவள் துடிக்காமல் என்ன செய்வாள் அர்ஜுனா ?என்றாள்..
பிரசாத் தவித்து போனான் .. கோவத்துடன் தேவியை பார்த்தான் , "உன்னக்கு மனசாட்சி இல்லையா ஏன் இப்படி இவளை சித்திரவதை செய்கிறாய் என்னை வேண்டுமானால் சித்ரவதை செய் அவளை விட்டுவிடு அவள் ஒன்றும் அறியாதவள் .?"
"அர்ஜுனா அவள் ஒன்றும் அறியாமலா உன்னை என்னிடம் இருந்து பிரித்தாள்.. ? நீ என் மீது காதல் வைத்திருகிறாய் அப்படி இருந்தும் உன்னால் என்னுடன் வாழ முடியவில்லை அதற்க்கு காரணம் இந்த சாதனா தான்.. "என்று கத்தினாள் ..
சஞ்சு இடைமறித்தாள் "நீ இவரை காதலித்து உண்மை ஆனால் இவர் சந்தோஷம் என்னவோ அதை தன் நீ செய்வாய் உன் சுயநலத்துக்காக இவர் மனைவியை நீ சித்ரவதை செய்யமாட்டாய்.."என்றாள் ..
தேவி சாதனவை விட்டுவிட்டாள்.. சாதனா சோர்ந்து போய் சோபாவில் வீழ்ந்தாள்.. பிரசாத் அவளை ஆதரவாய் தண்ணீர் கொடுத்து சாயவைதான் ..
"அர்ஜுனா என் கண் முன்னாலேயே அவளுக்கு பணிவிடை செய்கிறாய் உனக்கு என்ன தைரியம் .? "
இதற்கும் விடை சஞ்சு அளித்தாள்.. "தேவி நீ நல்லவள் அவருக்காக உயிரை விட்டாய் இப்பொது அவருக்காக நீ அவரை விட்டு போய்விடு .. அவர் உனக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்.. உன் உயிரை தெரியாமல் பறித்துக் கொண்டதற்காக அவர் உயிரையும் விட்டார், உன்னை காப்பாற்றி இருக்கிறார் .. 2ண்டு வாரம் தான் உன்னுடன் அவர் பழகியது , உன்னை அவர் மணக்கவும் இல்லை ஆனால் , சாதனவை அவர் மனது விட்டார் .. உனக்காக இவ்வளவு செய்தவர் மனைவிகாக இதை கூட செய்யமாட்டாரா.? அவரை காதலித்து உண்மை ஆனால் நீ சென்று விடு இவர்களை வாழவிடு .." என்று பணிவாய் உண்மையை எடுத்து சொன்னாள்..
தேவிக்கும் சஞ்சு சொல்வதில் இருந்த நியாயம் தெரிந்தது.. பாசம் கண்களை கட்டிவிட்டது இதனை நாளும்..
"அர்ஜுனா என்னை மன்னிச்சுடு உன்னுடன் வாழ என்னக்கு கொடுத்து வைக்கல.? ஆனால் உன்னை அடுத்த ஜென்மத்திலாவது நான் அடைவேன் .. இல்லாவிட்டால் உனக்கு இந்த ஜென்மத்தில் ஆவது நான் மகளாய் பிறப்பேன் .. நான் போகிறேன் .. "என்று கண்ணீருடன் , காதலும் கரைய அவள் அங்கிருந்து சென்றாள்..
சாதனா சஞ்சுவுக்கு நன்றி தெரிவித்தாள்..
கொடைக்கானலை விட்டு வீடு திரும்பினர் அனைவரும் ..
ஒரு வருடத்திற்கு பிறகு ..
பிரசாத் அறைக்குள் நுழைந்தான்.. "சாதனா ,என்ன செய்றே ? இப்போதான் டாக்டர் போன் பணினார் என் குழந்தை இன்னும் 10தே நாளில் பிறந்துவிடுவாலாம்.. என்று அவளிடம் வந்தான் ..
அவள் வெட்கத்துடன் அவனை பார்த்தாள் .. "உங்களுக்கு உங்க குழந்தை தான் முக்கியம் பிறக்கும் முன்னமே இப்படி உருகுறீங்க பிறந்தால் என்னை சுத்தமா மறந்துடுவீங்க "என்று செல்லமாய் கோபித்துக் கொண்டாள் ..
அவன் அதை ரசிதவரே , பாட ஆரம்பித்தான் , "கோவக்கார கிளியே என்னை கொத்தி விட்டு போகாதே அருவா முனைய போல உன் புருவம் தூக்கி காட்டாதே.. ", என்று அழகாய் பாடினான்.
அவள் அவனை பார்த்து சிரித்தாள், "un sirippinil
un sirippinil
en manadhin paadhiyum pOga
un imaigaLin
kaN imaigaLin
menpaarvaiyil meedhiyum தேய" என்று பாடினான் அவள் சிரிப்பை ரசித்தவாறே ..
"அப்பப்பா போதும் உங்க பாட்டு போதும் .. "என்றாள் ..
" அப்படியா என் காதலும் இவ்வளவு போதுமா .? "என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு சிரிப்புதான் வந்தது ..
10து நாட்களுக்கு பிறகு ..
அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது ... அந்த குழந்தையை பார்த்த சாதனவுக்கும், சஞ்சுவுக்கும், பிரசாத்துக்கும் ஆச்சரியம் , அது தேவியை போலவே இருந்தது ..
பிரசாத் சொன்னான் ,"தேவி ன்று தான் இந்த குழந்தைக்கு பெயரிட வேண்டும் இது என் தேவி தான் .. தேவிதான் எனக்கு மகளாய் பிறந்திருக்கிறாள் அன்று சொன்னது போலவே "என்றான் ..
சஞ்சுவும், சாதனாவும் அதை அமோதித்து தலை அசைத்தனர்..
அந்த குழந்தை பிரசாத்தை தேவி பார்ப்பது போல அழகாய் பார்த்தது ..
சாதனாவின் அருகில் வந்து , "சாது எதனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் ஏன் மனைவியாக வேணும், தேவி தான் என் மகளாக வேணும் " என்று சாதனவை பார்த்து கண்களில் காதல் மின்ன கூறினான் ..
முதன் முறையை சாதனா பாடினாள் , "கண்களில் மின்னிடும் காதலை நான் அன்றே கண்டேன் ஒரு முறை நெஞ்சில் தேனை பாய்திட அதே நீயே சொன்னாய் மறுமுறை " பிரசாத் அவளை வியப்பாய் பார்த்து சிரித்தான்..
Written By.,
PiNkY..