Author Topic: ~ வல்லாரை கிரையின் உடல்நல நன்மைகள்:- ~  (Read 672 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226378
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வல்லாரை கிரையின் உடல்நல நன்மைகள்:-




இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப்ப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

வளரியல்பு -: ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக இருக்கும்.
வேர்க்கூட்டத்திலிருந்து தோன்றும் இலைக்காம்பு மிகவும் நீண்டு இருக்கும். ஒரு கணுவிலிருந்து
1 முதல் 3 இலை தோன்றும். இலையின் வடிவம் வட்ட வடிவமாகவோ, மொச்சை வடிவமாகவோ இருக்கும். அகலம் அதிகமாக இருக்கும். கரு வல்லாரை என்ற ஓரினம் மலைப்பாங்கான இடங்களிங் வளர்கின்றன. கொடிமற்றும் விதைகளில் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் -: உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளைவளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது.

முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48-96 நாள் சாப்பிடவும். மேலே கூறப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருசம் சாப்பிட்டால் நரை, திரை மாறும்.

வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.

இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி.காலை மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும்.
ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காச்சலும் தீரும்.

கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்தியரிசித் திப்பிலி மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன் படும்.

பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை+உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.

வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்.
« Last Edit: March 01, 2013, 11:34:28 PM by MysteRy »