என் இனிய தாய் மார்களே.....!
டிவி சீரியலு ஜோரு ஜோரு
தீவிர ரசிகைய பாரு பாரு
தன்னை மறந்த ஒரு தாய் மாரு
தன் குழந்தை இழந்த கதைய கேளு...
சினிமா பாக்க அவளுக்கு ஒரு டிவி
சின்னக் குழந்தை பாக்க அதுக்கு ஒரு டிவி
குழந்தை ஒரு அறையில் - அதன்
அன்னை ஒரு அறையில்.....
பொம்மை கார்டூன் ஏதோ கடிப்பது கண்டு
பொசுக்குன்னு எலக்ட்ரிக் ஒயரைக் குழந்தை
அபாயம் அறியாது
அழுத்தமாய் கடித்திழுக்க.........!
ஐயஹோ என்ன சொல்ல.....?
அடுத்த நொடி அங்கே மரணம்.....!
எச்சரிக்கை கவிதை இது - அபாயம்
எடுத்துச் சொல்ல ஒரு படத்தோடு.....
விளையாட்டு வினையாகும் - அதை
விளங்கிடுவோம் நன்றாய் நாமும் - இனி
விலக்கிடுவோம் நம் ஆசைகளை - நலமே
வளர்த்திடுவோம் நம் குழந்தைகளை