Author Topic: Aromatic Garlic Rice Recipe  (Read 900 times)

Offline kanmani

Aromatic Garlic Rice Recipe
« on: February 26, 2013, 11:54:05 PM »
When we say 'garlic rice' you are probably imaging a spicy oriental fried rice. But the garlic rice that we are making today is actually an Indian rice recipe. You could also say that it is a type of pulao recipe. Garlic rice is made with the combination of mashed garlic pods and basmati rice. The dominating flavour of this Indian rice is recipe is obviously garlic.

You can add your favourite vegetables to garlic rice as long as it does not affect the original flavour. If you add a lot chopped vegetables like carrots, beet, beans and peas, this actually becomes vegetarian pulao recipe. But garlic rice can also be made without any vegetables.


Ingredients

Garlic pods- 20 (crushed)
Basmati rice- 2 cups
Green chillies- 4 (slit)
Dry red chillies- 3
Coriander seeds- 1tsp
Cumin seeds- 1/2 tsp
Bay leaf- 1
Fennel seeds or Saunf- 1/2 tsp
Cashew nuts- 10 (chopped)
Peanuts- 10
Ghee- 2tsp
Salt- as per taste

 Procedure

Make paste by grinding dry red chillies, cumin and coriander seeds. Add a little water to form a thick paste.
Melt ghee in a pressure cooker. When it gets warm, fry the cashew and peanuts in the cooker for 1 minute.
Strain the fried nuts and keep them aside. Now season the ghee with saunf, bay leaf and the slit green chillies.
After a minute add the paste you prepared to the cooker.
Mix it up with the seasoning and cook for 3-4 minutes on low flame.
Add crushed garlic to the cooker and mix it up.
Cook for 2-3 minutes on low flame. Now pour the rice into the cooker and mix it up with the masala. Cook for 2 minutes on low flame. Add 3 cups of water and salt.
Close the lid of the pressure cooker and cook for the duration of 2 whistles.
Garnish the garlic rice with fried cashew and peanuts. Serve it with hot and spicy curries.



« Last Edit: February 27, 2013, 11:59:21 AM by kanmani »

Offline kanmani

Re: Aromatic Garlic Rice Recipe
« Reply #1 on: February 27, 2013, 11:55:55 AM »
பூண்டில் உடலுக்கு வேண்டிய நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் பூண்டு உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். சிலருக்கு பூண்டின் நறுமணம் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்களுக்கு, காய்கறிகளை சேர்க்காமல், பூண்டை வைத்து மட்டும் ஒரு சிறப்பான முறையில் புலாவ் செய்யலாம். சரி, இப்போது அந்த பூண்டு சாதத்தின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பூண்டு - 20 பல் (லேசாக தட்டியது)
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 10
 வேர்க்கடலை - 10
எண்ணெய்/நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:


 முதலில் பாஸ்மதி அரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவ வேண்டும்.

பின் மிக்ஸியில் வரமிளகாய், சீரகம் மற்றும் மல்லி போன்றவற்றை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல், நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் வேர்க்கடலை போட்டு ஒரு நிமிடம் வறுத்து, அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து விட வேண்டும்.

பிறகு அதில் சோம்பு, பிரியாணி இலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின்பு அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் தட்டி வைத்துள்ள பூண்டைப் போட்டு, சிறிது நேரம் வதக்கி, கழுவி வைத்திருக்கும் அரிசியைப் போட்டு கலந்து, 2 நிமிடம் வதக்கி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பை சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

 இப்போது சுவையான பூண்டு சாதம் ரெடி!!!

 இதன் மேல் வறுத்த முந்திரி மற்றும் வேர்க்கடலை போட்டு அலங்கரித்து, பரிமாற வேண்டும். வேண்டுமெனில் இதனை குழம்பு அல்லது கிரேவியுடன் சாப்பிடலாம்.