கண்ணாடி என்ற எனது இதயத்தை
கல் என்ற உனது காதலால் சிதற செய்தாய்
நீ உடைத்த எனது இதயத்தை
என்னால் மீண்டும் ஒட்ட முடியவில்லை
ஒட்டினாலும் உன்
நினைவு என்னை கொல்கிறது
உன்னை நினைத்து நினைத்தே
மனம் வாடுகிறது
உன்னை வேண்டுமென
அது நாடுகிறது
உடைந்த என் இதயத்தை
உன்னால் மட்டுமே ஒட்டவைக்க முடியும்
எனவே திரும்பி வா
என் இதயத்தை ஒட்ட வைக்க!
நெஞ்சில் உன் நினைவுகள்
கண்ணில் உந்தன் பிம்பம்
மூளையை செயலிழக்க வைக்கும் உந்தன் ஞாபகம்
இதை விட பெரிய தண்டனை இந்த உலகில் உண்டா