Author Topic: வெங்காய கறி வடகம்  (Read 723 times)

Offline kanmani

வெங்காய கறி வடகம்
« on: February 25, 2013, 10:50:01 PM »

    சின்ன வெங்காயம்(தோல் உரித்தது) - 8 டம்ளர்
    வெள்ளை உளுத்தம்பருப்பு - 1.5 டம்ளர்
    கடுகு - 1/2 டம்ளர்
    சீரகம் - 1/2 டம்ளர்
    வெள்ளைப்பூடு - 1/2 டம்ளர்
    பெருங்காயம் - சிறிது
    மிளகாய்ப் பொடி - 1/2 டம்ளர்
    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் பொடி - 2 டீஸ்பூன்
    கருவேப்பிலை - 1/2 டம்ளர்
    கல் உப்பு - 1/2 டம்ளர்

 

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, லேசாக அரைத்துக் கொள்ளவும்.
    கடுகை கல் இல்லாமல் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
    கருவேப்பிலையை பொடியாக கிள்ளி வைக்கவும்.
    சீரகம், வெள்ளைப் பூண்டு இரண்டையும் சேர்த்து அரைக்கவும்.
    வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.
    ஊறிய வெந்தயத்தை ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும்.
    ஒரு பெரிய பாத்திரத்தில், உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம், பூடு, அரைத்த பருப்பு, கடுகு, மற்றும் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகப் போட்டுப் பிசைந்து கொள்ளவும்.
    ஒரு ப்ளாஸ்டிக் ஷீட்டில், இந்த வடக மாவை சிறு சிறு உருண்டைகளாக(நெல்லிக்காயளவு) உருட்டி வைத்து, நல்ல வெயிலில் காய வைக்கவும்.
    ரொம்பவும் அழுத்தி உருட்டாமல், லேசாக உருட்டி வைக்கவும்.
    இரண்டு, மூன்று நாட்கள் நன்றாக(உட்பக்கம் ஈரமில்லாமல்) காய வேண்டும்.
    டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது, எண்ணெயையைக் காய வைத்து, அதில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளலாம்.
    குழம்பில், கடைந்த கீரையில், மோர்க் குழம்பில், தாளிக்கலாம்.