கொண்டைக்கடலை - ஒரு கப்
பூண்டு - ஒரு பல்
வெள்ளை எள் - 3 மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் - தேவைக்கு
உப்பு
எலுமிச்சை சாறு - தேவைக்கு
தஹினி செய்ய எள்ளை கடாயில் போட்டு படபடவென பொரிந்ததும் எடுக்கவும். சிவக்க வறுக்க கூடாது.
எள் ஆறியதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
பொடித்த எள்ளுடன் சிறிது சிறிதாக ஆலிவ் ஆயில் சேர்த்து மயோனைஸ் பதத்திற்கு நைசாக அரைத்து எடுக்கவும். தஹினி தயார்.
கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து நன்கு வேக வைக்கவும். வேக வைத்த நீரை தனியாக எடுத்து வைக்கவும்.
தஹினியுடன் வேக வைத்த கொண்டைக்கடலை, பூண்டு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும்.
அரைப்பதற்கு கொண்டைக்கடலை வேக வைத்த நீரை பயன்படுத்தலாம். கடைசியாக 2 - 3 மேசைக்கரண்டி ஆலிவ் ஆயில் விட்டு அரைத்து எடுக்கவும்.
சுவையான ஹும்மூஸ் (Hummus) தயார். இது டிப் / மயோனைஸ் போன்ற பதத்தில் இருக்க வேண்டும். கெட்டியாகவோ, நீர்க்கவோ இருக்காது. பரிமாறும் போது இதன் மேல் சிறிது ஆலிவ் ஆயில் விட்டு பரிமாறவும்.
இது குபூஸ், ஷவர்மா, ஃபலாஃபெலுடன் சாப்பிட சுவையாக இருக்கும். டிப்பாகவும் பயன்படுத்தலாம். இதில் கேனில் உள்ள வேக வைத்த கொண்டைக்கடலையும் பயன்படுத்தலாம். டின்னில் அடைத்த நீரையே அரைக்க பயன்படுத்த வேண்டும். இதில் தஹினி நல்ல சுவை தரும். ஆனால் அது இல்லாமலும் செய்யலாம். ஷவர்மா போல் ஹும்மூஸிலும் பல வகைகள் உண்டு.