Author Topic: முந்திரி பக்கோடா  (Read 656 times)

Offline kanmani

முந்திரி பக்கோடா
« on: February 25, 2013, 04:21:01 PM »
மாலை நேரங்களில் டீ அல்லது காபி குடிக்கும் போது பக்கோடா சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் மாலை நேரமானது வெயில் இல்லாமல், குளிர்ச்சியுடன் இருப்பதால், அப்போது சூடாகவும், சுவையுடனும் பக்கோடாவை செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை. குறிப்பாக உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நட்ஸில் ஒன்றான முந்திரியை வைத்தும் பக்கோடா செய்யலாம். இப்போது அந்த முந்திரி பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

முந்திரி - 1 கப்
கடலை மாவு - 3/4 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
புதினா - சிறிது (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கறிவேப்பிலை மற்றும் உப்பு போட்டு, அத்துடன் தண்ணீரை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

 பின்னர் அதில் முந்திரிப் பருப்பை போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, முந்திரியை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான முந்திரி பக்கோடா ரெடி!!!