Author Topic: உன்னோடு கரம் கோர்த்த நொடி  (Read 617 times)

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
"காதலில் சுழலும் உலகம்.."
இதை நான் பல முறை கேட்டிருக்க..
இன்று இதை உணர்கிறேனடா..!
ஆபத்தில் உதவிய உன் கரம் பிடித்து நடக்கையில்..

நீ யாரோ ..?
என்னை விடியும் இந்த பொழுதிற்கு முன் நடக்கயிருந்த..
ஆபத்திலே.. ரௌதிரமாய் வந்து காப்பாற்றிய ..
உன் கரங்கள்..!

இந்த கரத்தை.. ஏன்..? இதனை நாட்களும் நான் சந்திக்கவில்லை..?!!
என்னை நீ அறியாய்.. நானும் உன்னை அறியேன்..
உன் பெயரை நானும் .. ஏன் பெயரை நீயும் அறியாதிருக்க..
என் ஆபத்தில் உதவிய உன் கம்பீரமும்.. ரௌத்திரமும்..
என் மனதை கொள்ளை கொண்டது ..

ஆதவன் தன ஆயிரம் கரங்களை விரித்து ..
நீ வாழும் .. இந்த அதிசய பூமிக்கு வரும் முன்..
உன்னவளாக நான் மாற விரும்புகிறேன் அடா..!!

மிக சிறிய நேரத்தில்..
நீ என்னவனாக.. என் இதயத்தில் நுழைந்துவிட்டாய்..
உன் வாழ்வில் எனக்கு இடம் இல்லாவிட்டாலும்..
உன் கரங்களை பிடித்து நடக்கும் ..
இந்த இனிய நேரத்தையாவது கொடு..
என்னவனே.. என் உயிரில் கலந்தவனே.. !!
      (என்று பெண் மனம் துடிக்க.. உணர்ந்த ஆணின் மனம் வார்த்தைகளாய்..)

  அடி பெண்ணே..!
கரம் பிடித்து நடக்க மட்டும் அல்ல..
என் இதயத்தில் உனக்கு இடம் கொடுத்துவிட்டேன் அடி..!
உன் கரம் கோர்த்த நொடியே. ..
என் மனம் உன்னை தேட ஆரம்பித்துவிட்டது...

உன்னை இப்பொது பிடித்த இந்த உதவி கரம்..
இனி என் காதலை உனக்கு அள்ளி கொடுக்கும்..! கரமாகவும்..
உன் அன்பை அணைக்கும் கரமாகவும்..
உன் வாழ்கையில் துணை வரும்..

என் கம்பீரத்தில் வீழ்ந்த உன் மனமும்..
உன் கன்னக்குழியில் புதைந்த என் இதயமும்..
நாம் கரம் கோர்த்து நடக்கும் இந்த பாதையை..
நம் காதல் ஓவியத்திற்கு .. உயிரளிபதாய் மாற்றும்..

என் தோளில் சாய நீ வேண்டும்..  அடி என்னவளே..!



                                                                                                         Written By.,
                                                                                                          PiNKY...