1. காலிஃப்ளவர் - பெரிய பூ 1
2. கார்ன் மாவு - 1/2 கப்
3. மைதா - 1/2 கப்
4. அரிசி மாவு - 2 - 4 மேஜைக்கரண்டி [விருப்பத்துக்கு]
5. உப்பு
6. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
7. சின்ன எலுமிச்சை - 1/2
8. மிளகாய் / சாம்பார் தூள் - 3 தேக்கரண்டி [ காரத்துக்கு]
9. எண்ணெய் - தேவைக்கு
10. மஞ்சள் தூள் - சிறிது
11. சோடா மாவு - சிறிது
காலிஃப்ளவரை நீண்ட காம்புகள் உள்ளவையாக பார்த்து எடுத்து நறுக்கி வைக்கவும்.
அவற்றை நீரில் போட்டு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து பாதி பதம் வேக வைத்து எடுக்கவும்.
நீரில்லாமல் வடித்து வைக்கவும்.
மாவு வகைகள், தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு எல்லாம் ஒன்றாக சிறிது நீர் விட்டு பஜ்ஜி மாவு பத்தத்தில் கரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காலிஃப்ளவரை மாவில் முக்கி எடுத்து பொரித்து எடுக்கவும்.
காம்பு பகுதியில் அலுமினியம் ஃபாயில் சுற்றி வைக்கவும்.
சுவையான காலிஃப்ளவர் லாலிபாப் தயார்.
Note:
எலுமிச்சை சாறு மாவில் கலந்தாலும் சரி, பின் பரிமாறும் போது வைத்தாலும் சரி. காலிஃப்ளவர் முழுவதும் வேகாமல் பார்த்து எடுக்கவும். இல்லை எனில் பொரிக்கும் போது எண்ணெய் குடிக்கும். விரும்பினால் கரம் மசாலா சிறிது சேர்க்கலாம்.