வல்லாரைக் கீரை - 2 கட்டு
காய்ந்த மிளகாய் - 10
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
தேங்காய் - ஒரு மூடி
புளி - சிறிதளவு
உப்பு
எண்ணெய்
வல்லாரைக் கீரையை அலசி தண்ணீரை நன்கு வடித்து விடவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைக்கவும்.
கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியே சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும்.
பின்பு காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டை வறுக்கவும்.
தேங்காய் துருவலை வறுக்கவும்.
கடைசியாக வல்லாரைக் கீரையை பச்சை நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும். (இல்லையேல் கசப்புத்தன்மை போகாது).
வறுத்தவை அனைத்தும் நன்கு ஆறியதும் கரைத்த புளி, உப்பு, தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
சுவையான வல்லாரை துவையல் ரெடி. இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். சிறிது நல்லெண்ணெய் விட்டும் சாப்பிடலாம்.
வல்லாரைக் கீரை மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்திக்கு மிகவும் நல்லது. அதுவும் படிக்கும் குழந்தைகளுக்கு மிக மிக நல்லது.