இந்த பதிவினை கோதம் ( கெளதம் இல்லை, ' w ' என்ற எழுத்து இல்லை என அவரே அழுத்தமாக தன் அறிமுகத்தில் கூறியது போல படித்த நியாபகம் ) அவர்களுக்கு சமர்பிக்கிறேன்..
அரட்டை அரங்கம் பற்றி சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இணையத்தில் அதிகமாக உலவும் அனைத்து தரப்பினரும் அறிந்து இருக்க கூடிய வார்த்தை அரட்டை"chat ".. இது பற்றி அனேகமாக அனைவருக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கத்தான் செய்யும்..அரட்டையில் பலவகை உண்டு..உங்கள் ரசனைக்கு,தேவைக்கு,மொழிக்கு என பல முகங்கள் பளிச்சென உள்ளன..அரட்டை அறை விபரீதங்களால் செய்யப்பட்ட கொலைகளும் தற்கொலைகளும் பற்றி செய்திகள் அவ்வப்போது வருவதுண்டு...இதே அரட்டை அறையில் காதலித்து,மணமுடித்து வாழும் வெற்றிபெற்ற தம்பதிகளும் உண்டு..இதுபோன்ற அரட்டை அறை கண்ணாடிகளின் பிம்பங்களை இங்கே காணலாம்...
அரட்டை அரங்கத்தின் உள்ளே செல்லும் முன்னர் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு சில புள்ளிவிவரங்கள் மற்றும் எச்சரிக்கைகள்..
* வாகனத்தை இயக்கும் போது texting எனப்படும் sms,chat இது போன்ற சேவைகளை உங்கள் செல்பேசி அல்லது எந்த வகை சாதனங்கள் வாயிலாகவும் உபயோக்கிகாதீர்...இது போல விபத்துக்கள் நாள் ஒன்றுக்கு நான்கு இடங்களில் நடைபெறுவதாக கூறப்படுகிறது..
* 71% பெண்களும் 67% ஆண்களும் தங்களின் காதலர்களுக்கு ஆபாசம் அடங்கிய தகவல்களை இணையத்தின் வாயிலாக பரிமாறி கொள்கிறார்கள்..
*22% இளம்பெண்கள் தங்களின் ஆடையின்றி எடுக்கப்பட்ட புகைப்படங்களை மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்துகொள்கின்றனர்
*96% இளைய வயதினர் சமூக வலைதளங்களில் ( facebook ,myspace ,chat ,blogs ) பாவனையாளராக உள்ளனர் ..
*95% பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளின் இணைய செயல்பாடுகளை கவனிக்கும் மென்பொருள்கள் பற்றியோ, அது சார்ந்த விழிப்புணர்வோ இல்லை...
*முப்பத்து மூன்று பேரில் ஒருவர் (1/33) என்ற விகிதாசாரத்தில் இணையத்தில் வாயிலாக அறிமுகமாகி ,நேரில் சந்திக்கும் பொழுது பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்..
அரட்டை அரங்கத்தின் பாவனையாளரா நீங்கள்..?அறிந்து கொள்ள வேண்டிய சில பொதுவான தகவல்கள்..இணைய தளத்தின் வாயிலாக நீங்கள் பரிமாற்றம் செய்யும் எந்த தகவல்களும் காலத்தால் அழியாதவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்..ஒரு முறை நீங்கள் செய்யும் தவறு உங்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..உங்கள் நடவடிக்கைகள் யாரோ ஒருவர் மூலம் கண்காணிக்கபடுகிறது என்ற விழிப்புணர்வு என்றும் உங்களிடம் இருக்கட்டும்...அரட்டை அரங்கத்தின் எந்த வகை பாவனையாளராக இருந்தாலும் இது பொருந்தும்..பயனர் முதல் நிர்வாகி வரை உங்களின் செயல்பாடுகள் எங்கோ சேமிக்கப்படுகிறது என்று மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை எக்காரணம் கொண்டும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்..உங்கள் பெயரில் நடைபெறும் தவறுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு..தேவையறிந்து உங்கள் அரட்டை அறையை தேர்ந்தெடுங்கள்..பாலியல் தேவைகளுக்கு என தனியாக அரட்டை அறை செயல்படுகின்றன என்பதனை நீங்கள் அறிவீர்கள்..உங்கள் தேவைகளை,கருத்துக்களை எவர் மீதும் திணிக்காதீர்கள்..நீங்கள் அரட்டை அடிக்கும் அறையின் விதிமுறைகளை மீறாதீர்கள்...
சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.. உங்களின் இணைய நடவடிக்கை மூலமாக நீங்களே உங்கள் செயல்பாடுகளை மதிப்பிட்டுக்கொள்ள இயலும்...
* நீங்கள் முயற்சி செய்யும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரட்டை அரங்கத்தில் நுழைய முடியாமல் போனால் அல்லது உங்கள் இணைய சேவை மெதுவாக செயல்பட்டால் எவ்வாறு உணர்கிறீர்கள்???
* உங்களின் அன்றாட அலுவல்களை உங்கள் அரட்டை நேரம் பாதிக்கிறதா??
* நண்பர்களின் பேச்சு நீண்ட நேரத்திற்கு உங்களை பாதிக்கிறதா??
* உங்களுக்கு விருப்பமானவர் மற்றவருடன் மகிழ்ச்சியாக உரையாடுவதை மனம் ஏற்க மறுக்கிறதா??
* உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் "இனி உன்னுடன் அரட்டை அடிக்க மாட்டேன்" ,"இந்த அரட்டை அறைக்கே வர மாட்டேன்" என அடிக்கடி கூறுகிறீர்களா ??
* உங்கள் நண்பர்கள் செய்யும் கலாட்டா உங்களை காயப்படுத்துகிறதா ??
* உங்களை உங்கள் நெருங்கிய நண்பர் கண்காணிப்பதால் இயல்பாக பேசாமல் நடிக்கிறீர்களா ??
இது போன்ற கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் என்றால் சற்று சிந்தித்து செயல்படுங்கள்...உங்களின் சுயத்தை நீங்கள் இழக்காதீர்கள்...
அரட்டை அறையின் பாதகங்கள்....நண்பர்களை தக்கவைத்துக்கொள்ள செய்யப்படும் தவறுகள்...இது போன்ற தவறுகள் உங்களை எங்கு வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம்..வயது மீறிய ஆசைகள் உங்கள் எண்ணங்களில் தோன்ற கூடும்...பொறாமை உணர்வு உங்களையும் அறியாமல் ஆட்கொள்ளலாம்...உடல்நல கேடுகள் உருவாக உங்கள் நீண்ட நேர கணினி பயன்பாடு காரணமாக அமையலாம்..நிறைவேறாத காதல் உங்களை தற்கொலை அல்லது கொலைமுயற்சிக்கு தூண்டக் கூடும்...
அரட்டை அறை சாதகங்கள் :
* உங்களின் நட்பு வட்டாரம் அதிகரிக்கும்...
* நண்பர்களை தினமும் உங்கள் கணினி வாயிலாக இல்லத்திலே கவனிக்கும் உணர்வு உங்களை உற்சாகப் படுத்தும் ..
* வெவ்வேறு நாட்டில் உள்ள நண்பர்கள் மூலம் அந்த நாடு,மக்கள்,கலாசாரம் மற்றும் உணவு முறைகளை எளிதாக பெறலாம் ..
* கருத்து சுதந்திரம்..உங்கள் கருத்துக்களை எளிதாக,இலகுவாக உலகமெங்கும் எடுத்துசெல்ல வழி இங்கு உள்ளது...
* உங்கள் காதலரை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக கூட அமையலாம்...
* வீட்டில் தனியாக இருக்கும் இல்லத்தரசிகள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் தனிமையை போக்கவும் அரட்டை அறை ஒரு அற்புத இடமாகும்...
* பெண்கள் அறியாத பல தகவல்களை எளிதாக நண்பர்களின் துணையோடு அறிந்துகொள்ளவும் ஆண் ,பெண் உறவின் எதார்த்தங்களும் அறிந்துகொள்ள மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது..
* மனக்குறைகளை போக்கும் மிக சிறந்த மருந்தில்லா மருத்துவம் அரட்டை அரங்கம்...
* உங்கள் தன்னம்பிக்கை மற்றும் தகுதிகளை மேம்படுத்த உதவும் நவீன யோகா இந்த அரட்டை அரங்கம் ...
உங்களின் நடவடிக்கை மூலமாகவே நீங்கள் எதையும் அடைய முடியும் என்பதனால், அரட்டை அரங்க நன்மைகளை பெற சில கசப்பான அனுபவங்களை நீங்கள் கடக்க நேரிடும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்..அரட்டை அறையில் இருந்து விலகி செல்வது நிரந்தர தீர்வு அல்ல என்பதனையும் அறிந்துகொள்ளுங்கள்.. இயன்றால் மழையைப் பற்றி இன்னொரு பதிவிலோ , அல்லது வேறு பதிவின் மூலமாகவோ சந்திக்கிறேன்..
நட்புடன்
ftc பயனர்
©தனிமனித காப்புரிமை விதிகளுக்கு உட்பட்டது.