Author Topic: ~ ஆப்பிள் சாப்பிட்டா ஆயுள் கூடும் ~  (Read 532 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226396
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆப்பிள் சாப்பிட்டா ஆயுள் கூடும்



‘அன் ஆப்பிள் எ டே, கீப்ஸ் த டாக்டர் அவே’ என்பது அனைவரும் அறிந்த மொழி. பொதுவாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும்போது, ஆப்பிள் கொடுப்பது வழக்கம். அந்த அளவுக்கு ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது.
ஆப்பிள் குறித்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது தெரியவந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸென் யூ சென் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு இது.
ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், சாராசரியாக மனித ஆயுளை 10 சதவீதம் அதிகரிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். பழங்களை, குறிப்பாக ஆப்பிளை தேடிச்செல்லும் வண்டுகள் உள்ளிட்ட பூச்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவற்றின் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகமாக இருப்பதன் மூலமும் இது உறுதியாகி உள்ளது.
இது குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் ஸென் யூ சென் கூறியதாவது:
ஆப்பிளில் உள்ள பாலிபெனால் என்ற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், உடலில் உள்ள நோய்க்கிருமிகளை பெருமளவில் அழிக்கிறது. இதனால் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியத்துடன் உடல் பருமன் குறைவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதை ஏராளமான ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வும் அதையே வலியுறுத்தி உள்ளது.
தக்காளி, ப்ராகலி, ப்ளூபெரி, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிக அளவு உள்ளது. அவற்றில் பாலிபெனால் என்ற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் ஆயுளையும் அதிகரிக்கிறது. இது ஆப்பிளில் மிக அதிக அளவில் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து உடல் மற்றும் மூளைச் செல்களின் செயல்பாட்டையும் தூண்டுகிறது.