மா இஞ்சிதுருவல் - 1 கப்
தனியா-1டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்-2
உளுத்தம்பருப்பு-1டீஸ்பூன்,
சீரகம்-1/2 டீஸ்பூன்
புளி- சிறிது
பெருங்காயம்-சிட்டிகை
உப்பு
நல்லெண்ணை-1 டேபிள்ஸ்பூன்
தாளீக்க:
கடுகு-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கீற்று
வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு,தனியா,மிளகாய்,சீரகம் வறுக்கவும்
நல்லெண்ணை ஊற்றி இஞ்சி துருவலை வதக்கவும்
இறக்குமுன் அதோடு புளி சேர்த்து மீண்டும் ஒருமுறைவதக்கவும்
வறுத்தவற்றை முதலில் மிக்ஸீயில் கரகரப்பாய் பொடிக்கவும்.
பின் வதக்கியதை சேர்த்து,உப்பு,பெருங்காயம் சேர்த்து விழுதாக அரைக்கவும்
பிறகு கடுகு,கறிவேப்பிலை தாளித்துகொட்டவும்
Note:
விரும்பினால் உளுத்தம்பருப்புக்கு பதிலாக தேங்காய்துருவல் 1 டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்