Author Topic: கார்லிக் ப்ரெட்  (Read 615 times)

Offline kanmani

கார்லிக் ப்ரெட்
« on: January 23, 2013, 10:04:08 AM »


    Baguette Bread- 1
    வெண்ணெய்- 3 மேசைக் கரண்டி
    பூண்டு- 2 முழுபூண்டுகள்
    உப்பு- கால்தேக்கரண்டி
    இத்தாலியன் ஹெர்ப்ஸ்- 1/2 தேக்கரண்டி(விருப்பப் பட்டால்)

 
    Baguette Bread ஐ 1இன்ச் தடிமனுள்ள ஸ்லைஸ்களாக வெட்டவும்.
    பூண்டை உரித்து ப்ரஷர்குக்கரில் குழைய வேக வைக்கவும். (பூண்டுடன் 1தேக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்தால் போதும்)
    வேகவைத்த பூண்டை தண்ணீரை தனியே வடித்து விட்டு கரண்டியால் நன்றாக மசித்து அதனுடன் வெண்ணெய், உப்பு, இத்தாலியன் ஹெர்ப்ஸ், பூண்டு வேகவைத்த நீர் 2 மேசைக்கரண்டி அளவு சேர்த்து கலக்கவும்.
    இதை ஸ்லைஸ் செய்த ப்ரெட்டின் இருபுறமும் தடவி ஒரு மைக்ரோவேவ் தட்டில் பரவலாக வைக்கவும்
    40விநாடிகள் முதல் 1நிமிடம் வரை மைக்ரோவேவில் வைத்து டோஸ்ட் செய்யவும். டோஸ்டர் அவனில் செய்வதாக இருந்தால் 180டிகிரியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
    சுவையான கார்லிக் ப்ரெட் ரெடி.

Note:

அவனின் திறனை பொறுத்து மைக்ரோவேவ் செய்யும் நேரமும் டோஸ்டர் அவனில் செய்யும் நேரமும் மாறுபடும். அவனில் இருந்து எடுத்ததும் ரொம்ப சாஃப்டாக இருப்பது போல் இருக்கும். கொஞ்சம் சூடு ஆறியதும் சற்று க்ரிஸ்பாக மாறும். அதனால் அவனில் க்ரிஸ்பாகும் வரை வைக்க வேண்டாம். உப்பு சேர்த்த வெண்ணெயாக இருந்தால் உப்பின் அளவை குறைவாக சேர்க்கவும்.