வேறு எங்கோ நோக்கி பயணம்
செய்த நான் பாதை மாறி
உன் பாதச்சுவட்டை பின் பற்ற,
உன்னை தொடரவில்லை, உன்
நினைவை, நான் நினைப்பதற்குள்
தோன்றுவாய், இதயத்தில் இதயத்
துடிப்பாய்,கண்ணீர் துளியில் பிம்பமாய்,
என் மனதின் சந்தோஷத்தை மறைத்து,
பயணம் முடிந்தது பெண்ணே, எட்டா
தூரத்தில் இன்பத்தின் கரையை கடந்து
தனியாக உன் நினைவு ஒன்றையே
துணையாய் எண்ணி!!!