Author Topic: ~ மஞ்சளின் மகிமை... ~  (Read 718 times)

Offline MysteRy

~ மஞ்சளின் மகிமை... ~
« on: January 09, 2013, 11:57:17 AM »
மஞ்சளின் மகிமை...



மஞ்சள் தலைசிறந்த கிருமிநாசினி என்பதை உணர்ந்த முன்னோர்கள், அதன் காரணமாகத்தான் மஞ்சளை அரைத்துக் குழைத்து, வீட்டு வாயிற்படியில் பூசினார்கள். ஆரோக்கியமாக இருந்தார்கள்.
இன்றோ, நிறமே முக்கியம் என வாயிற்படிகளுக்கு மஞ்சள் பெயின்ட் அடித்துவிட்டு, மருத்துவர்களுக்குக் கப்பம் கட்டிக்கொண்டு வருகிறோம். ஆரோக்கியத்தைத் தொலைத்துவிட்டோம்.

மஞ்சளின் மகிமையை- மருத்துவ குணங்களை நமது முன்னோர்கள் மட்டுமல்ல; முன்னோர்களுக்கெல்லாம் முன்னோர்களில் ஒருவரான அகத்தியர் விரிவாகவே சொல்லி இருக்கிறார்.

மஞ்சளை உடலில் பூசிக் குளிப்பதன் மூலம் உடல் பொன்னிறம் பெறும்; கெட்ட வாடை நீங்கும்; வசீகரமான தோற்றம் உண்டாகும்; வாந்தி, வாய்வு, சூடு, திருஷ்டி தோஷம், தலைவலி, நீர் கோத்தல், மூக்கில் நீர்பாய்தல், வீக்கம், வண்டுகடி, புண் ஆகியவை நீங்கும்.

அகத்தியர் குண பாடம்
பொன்னிறமாம் மேனி புலானாற்றமும் போகும்
மன்னு புருட வசியமாம் - பின்னியெழும்
வாந்தி பித்த தோடமையம் வாதம் போந் தீபனமாங்
கூர்ந்த மஞ்சளின் கிழங்குக்கு!