Author Topic: ~ தமிழ் நாட்டில் நாம் பார்க்க வேண்டிய அருவி உலக்கை அருவி !!!! ~  (Read 1082 times)

Online MysteRy

தமிழ் நாட்டில் நாம் பார்க்க வேண்டிய அருவி உலக்கை அருவி !!!!



கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் இயற்கை அருவியாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமுமாகும். கன்னியாகுமரியில் இருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தோவாளை தாலுக்காவிலுள்ள அழகியபாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த அருவியில் எல்லா மாதமும் நீர் வந்து கொண்டு இருக்கும்.

காடுகள் வழியாகச் செல்லும் ஒதுக்கப்பட்ட பாதைகள் மூலமே இந்த அருவியை அடைய முடியும். அருவியில் குளிப்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்குமாகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர்.

அருவியை சுற்றிப் பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா காடுகளும் மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன .


இந்நீர்வீழ்ச்சி மலை அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது, எனவே உலக்கை அருவிக்கு செல்வதென்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிற்சி செய்வது போன்றதாகும். அருவித் தண்ணீர் வரும் இடம் பார்ப்பதற்கு ஓர் உலக்கை போல் இருப்பதால் இதற்கு உலக்கை அருவி எனப் பெயர் வந்தது என்பர்.