தேவையான பொருட்கள்:
பச்சை மொச்சை - 2 கப்
வேர்க்கடலை - 1 கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மொச்சையை போட்டு வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே எண்ணெயில் வேர்க்கடலையை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பிறகு இரண்டையும் ஒரு பௌலில் போட்டு, அதில் மிளகாய் தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட வேண்டும்.
இப்போது நல்ல சுவையான ரோஸ்டட் மொச்சை ரெடி!!!