Author Topic: ~ சில்லி விளையாட்டு: ~  (Read 935 times)

Offline MysteRy

~ சில்லி விளையாட்டு: ~
« on: January 02, 2013, 07:38:34 AM »
சில்லி விளையாட்டு:



மழைக்காலங்களில் சிறுமியர் ஆடுவது. இருவர் சேர்ந்து ஆடுவதால் தலா ஐந்து கட்டங்களை நிலத்தில் வரைந்து உடைந்த மண் பானைத்துண்டுகளை சல்லியாக்கி (இதுதான் சில்லி என்று மாறியிருக்க வேண்டும்) கட்டத்துக்குள் வீசி ஒற்றைக் காலால் நொண்டியடித்தபடி கட்டத்தினுள்ளிருக்கும் சில்லியை மிதித்து அதனை அடுத்த கட்டத்துக்குக் காலால் எத்தித் தள்ளவேண்டும் அது போல் ஒவ்வொரு கட்டத்திலும் வீசி விளையாடுவர்.

இது போல் நான்கு சுற்றுகள் வெற்றிகரமாக முடித்தால் ஒரு பழம் பழுத்ததாகக் கூறி கடைசி நான்காவது கட்டத்தில் ஒரு பெருக்கல் குறி வரைந்துகொள்வது வழக்கம். வெற்றிக்கனிகளை முதலில் பெறுபவர் ஆட்டத்தில் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிறார்.

பயன்கள்: தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகிய பண்புகளைச் சிறுவயதிலேயே இவ்விளையாட்டு ஏற்படுத்துகிறது.