Author Topic: ஃபேஷியல் செய்த பின்னர் கவனிக்க வேண்டியவை…..  (Read 709 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்


ஒருசில சருமத்தினருக்கு மட்டுமே அந்த ஃபேஷியல் சரிபடும். மேலும் ஃபேஷியல் செய்த பின் ஒரு சிலவற்றை செய்தால், சருமம் நன்கு பாதுகாப்போடு இருக்கும். அது என்னவென்று பார்ப்போம்….

* ஃபேஷியல் செய்த பின்னர், முகத்தை விரல்களால் தேய்க்கக்கூடாது.

* ஃபேஷியல் முடிந்த பின்பு 2 மணிநேரத்திற்கு முகத்தை கழுவ கூடாது. வேண்டுமென்றால் முகம் எண்ணெய் பசையுடன் இருந்தால் மட்டும் தான் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகத்திற்கு சோப்பு உபயோகிக்க கூடாது.

* இந்த நேரத்தில் புருவத்தை வடிவமைத்தல், முகத்திற்கு ஆவி பிடித்தல் போன்றவற்றை செய்யக் கூடாது. ஏனெனில் ஃபேஷியல் செய்த பின்னர், சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும். அந்த நேரத்தில் புருவத்தை வடிவமைத்தால், ஈஸியாக வந்துவிடும். ஆகவே அவற்றையெல்லாம் செய்யாமல், சருமத்தை சற்று ரிலாக்ஸ் ஆக விடுங்கள்.

* ஃபேஷியல் செய்தப் பின்னர், 2-4 மணிநேரத்திற்கு வெயிலுக்கு செல்ல வேண்டாம். இதனால் புறஊதாக்கதிர்கள் சருமத்தை பாதிப்பதோடு, சருமத்துளைகளையும் பாதிப்படைய செய்யும், பின் ஃபேஷியல் செய்ததே வீணாகிவிடும்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், ஃபேஷியல் செய்ததன் பலனை முற்றிலும் அடைவதோடு, முகம் நன்கு அழகாக, பளபளப்போடு மின்னும்