Author Topic: வீட்டில் குறிப்பிட்ட திசையில் காலியிடம் இருக்கக் கூடாது என்று சிலர் கூறுகிறார்க  (Read 2051 times)

Offline Global Angel


பொதுவாகவே வீட்டின் வாயில் கதவைத் திறக்கும் போது மெல்லிய அதிர்வு உருவாகும். இது மனிதர்களால் உணர முடியாத அளவு இருக்கும். ஆனால் சுவாமி படங்களை வைக்கும் இடம் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த இடம் அதிர்வுகள் ஏற்படாதவாறு இருத்தல் அவசியம்.

எனவேதான் தலைவாசலுக்கு அருகே பூஜையறை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் வலியுறுத்தினர். இதேபோல் தலைவாசல் வழியாகவே அனைத்து தரப்பினரும் வந்து செல்வார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்கள் நல்மனது படைத்தவர்கள் என்றாலும் அவர்கள் சென்று வரும் இடம் (இறுதிச் சடங்கு) சிறப்பானதாக இருக்காது.

இதேபோல் அக்கம்பக்கத்தில் இருந்து வீட்டு விலக்கு பெற்ற பெண்களும் தலைவாசல் வழியாகவே வீட்டில் நுழைய நேரிடும். எனவேதான், பூஜையறையை தலைவாசலுக்கு அருகே வைக்கக் கூடாது என்று முன்னோர்கள் வலியுறுத்தினர்.

பழங்காலத்தில் ஈசானியம் அல்லது வடமேற்கு பகுதியில் பூஜையறை அமைத்தனர். அந்த திசையில் பூஜையறை அமைப்பது வாஸ்துப்படி நல்லது.