Author Topic: வாஸ்துவில் அலமாரி அமைப்பது பற்றி கூறப்பட்டுள்ளதா?  (Read 1593 times)

Offline Global Angel

வடக்கு, வடகிழக்கு திசை அதிக எடை கொண்ட அலமாரிகள் இடம்பெறாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வடக்கு, வடகிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வீட்டிற்குள் நுழையும் வகையில் இருந்தால் அந்த வீட்டில் ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெருகும்.

வடக்கு, வடகிழக்கு திசைகளில் திறப்பு (ஜன்னல்) அமைக்கலாம். காற்று வருவதை தடுக்கும் வகையில் பெரியளவிலான அலமாரிகள், எடை அதிகமான பொருட்கள் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும். எனவே, வீட்டின் மற்ற திசைகளில் மேற்கு, தெற்கு திசைகளில் அலமாரிகளை அமைத்துக் கொள்ளலாம்.

ஈசானிய மூலையில் இருந்து வரும் காற்றில்தான் பிராண வாயு அதிகம் இருக்கும் என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த திசையில் அடைப்பு இருக்கக் கூடாது. எனவே குறைந்தபட்சம் வடக்கு திசையில் ஜன்னல்கள் அமைப்பது அவசியம்