விலங்கு இழைய வகைகள்
விலங்குகளில் நான்கு அடிப்படைத் இழைய வகைகள் உள்ளன. இவற்றில் வெவ்வேறு இழைய வகைகள் இணைந்து உறுப்புகளையும், பின்னர் உறுப்புக்கள் இணைந்து உடலையும் உருவாக்கும்.
புறவணியிழையம்புறவணியிழையத்தின் வகைகள்.உட்புற மற்றும் வெளிப்புற உடற்பாகங்களை மூடும் புறச்சவ்வு புறவணியிழையத்தால் (Epithelial tissue) ஆனது. இவ்வகை இழையமானது புறச் சூழலுடன் தொடர்புடைய அனைத்து உள், வெளி உறுப்புக்களையும் மூடி இருக்கும். உடல் உறுப்புக்கள் உடலின் மேற்பரப்பை மூடியுள்ள தோல், சமிபாட்டுத் தொகுதி, சுவாசத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி போன்றவற்றை மூடியுள்ள மேற்பரப்பு போன்றவை இவ்வகை இழையங்களால் ஆனது.
இந்த இழையங்கள் உடல் உறுப்புக்களுக்கு பாதுகாப்பளித்தல், உடலிற்குத் தேவையான சில சுரப்புக்களைச் சுரத்தல், சமிபாடடைந்த உணவை அகத்துறிஞ்சல் போன்ற செயல்களைச் செய்யும். அத்துடன் இந்த இழையங்கள் ஏனைய இழையங்களில் இருந்து ஒரு அடிமென்சவ்வினால் (basal membrane) பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த இழையமானது உடலை நுண்ணுயிர்களின் தாக்கம், காயம் ஏற்படுதல், உடலிலிருந்து திரவ இழப்பு நேர்தல் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கும்.
இணைப்பிழையம்இணைப்பிழையம் (Connective tissue) அல்லது தொடுப்பிழையம் என்பது உடற்பாகங்களை இணைக்கும் திசு. குருதி, எலும்பு போன்றன இவ்வகைத் திசுக்களாகும். எலும்பானது உடல் உறுப்புகளுக்கு அமைப்பைக் கொடுப்பதுடன் உறுப்புக்களை இணைத்து வைத்திருக்கவும் உதவும். குருதி உடல் உயிரணுக்களுக்குத் தேவையான ஆக்சிசன், உணவு, சுரப்புக்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும், கழிவுகளை அகற்றவும் உதவும்.
தசை இழையம்தசைகளின் வகைகள் (வெவ்வேறு உருப்பெருக்க அளவுகளில் காட்டப்பட்டுள்ளது)
தசை இழையம் அல்லது தசையிழையம் எனப்படும் இழையங்கள் சுருங்கி விரியும் இயல்புள்ள இழையங்களாகும். இவை உடலசைவு, உள்ளுறுப்புக்களின் அசைவுக்கு உதவும். இவை மூன்று வகைப்படும்.
மழமழப்பானதசை அல்லது அழுத்தமான தசை (Smooth muscle): இவை உறுப்புக்களின் உள் படையாகக் காணப்படும்.
எலும்புத் தசை (Skeletal muscle): இவை எலும்புகளுடன் தொடர்புடையவையாக இருந்து அசைவுக்கு உதவும்.
இதயத் தசை (Cardiac muscle): இது இதயத்தில் காணப்படும். இதயம் சுருங்கி விரிய உதவுவதால் குருதியை உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்புவதில் பங்கெடுக்கும்.
நரம்பிழையம்நரம்புத் தொகுதி யை உருவாக்கும் இழையம் நரம்பிழையம் எனப்படும். இவ்வகைக் இழையங்கள் மூளை, தண்டு வடம் போன்ற மைய நரம்பு மண்டலம்தையும், புற நரம்பு மண்டலத்தையும் உருவாக்கும் இழையங்கள் ஆகும். நரம்பிணைப்பு மூலமான நரம்புத் தொடர்புகளில் இவ்வகை இழையங்கள் தொழிற்படும்.
http://நரம்பிழையத்தைக் காட்டும் ஒரு மாதிரி
.