எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்கு விருந்தினர் வருகை புரிந்தால், அவர்களை மகிழ்விக்க மிக சுலபமான முறையில் தயார் செய்ய ஏதுவான சுவையுள்ள இனிப்பு வகை இந்த அவல் அல்வா.
தேவையான பொருட்கள்:
அவல் - 4 கப்
சக்கரை - 1 கப்
நெய் - 3/4 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
குங்குமப்பூ - சிறிதளவு
முந்திரி, பாதாம், பிஸ்தா - சிறிது
செய்முறை:
கடாயில் நெய் விட்டு அதில் அவலை சேர்த்து மிதமான தணலில் இரண்டு நிமிடங்களுக்கு வறுக்கவும்.
பாலைக் காய்ச்சி அதில் குங்குமப்பூவை சேர்த்து அதனோடு வறுத்த அவலினை சேர்த்துக்கொள்ளவும்.
பாலில் அவல் வெந்து மிருதுவானதும், சக்கரையையும் மீதமுள்ள நெய்யையும் சேர்க்கவும். சேர்க்கப்பட்ட நெய் பிரிந்து வரும்வரை அல்வாவை கிளறிக்கொண்டே இருக்கவும்.
முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை நெய்யில் வறுத்து அல்வாவுடன் சேர்த்து இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.