Author Topic: ~ நச்சின்னு ஒரு கவிதை இவையெல்லாம் அம்மாவுக்ககவே....! ~  (Read 553 times)

Offline MysteRy

நச்சின்னு ஒரு கவிதை இவையெல்லாம் அம்மாவுக்ககவே....!



நேரில் தவிர்க்க முடிந்த அவளை
எவ்வளவு முயன்றும்
...
நினைவில் முடியவில்லை...!

காதல் தொடங்காமலே
விழியிலிருந்து விலா எலும்பு வரை
வலிக்க வைத்தவளை
எப்படி மறந்துபோவது..!

எனக்குள் நானே
புரியாமல் புரிந்துக்கொள்கிறேன்
உடலில் இன்னும் உயிர் இருக்கிறதென்று...!

உயிரை மட்டும் விலக்கி வைக்க
யாராலும் முடியாதுதான்
இருந்தாலும் முயற்சிக்கிறேன் நான்..!

உயிருக்கும் உடலுக்கும் இடையில்
ஒவ்வொறு நொடியும்
யாருக்கும் தெரியாமல் மரணப்படுகிறேன்...!

எல்லா குழப்பத்திற்கு பிறகு
மௌனமாய்
ஒரு முடிவு செய்றேன்..!

களையெடுத்துப் படிக்க வைக்கும்
என் அம்மாவுக்காக
காதல் வேண்டாம் என்று...!