Author Topic: கேரட் பணியாரம்  (Read 854 times)

Offline kanmani

கேரட் பணியாரம்
« on: November 28, 2012, 12:31:37 PM »
பச்சரிசி, புழுங்கலரிசி – தலா அரை கப், ஜவ்வரிசி – 2 டீஸ்பூன், துருவிய கேரட் – அரை கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – ஒரு டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
புழுங்கலரிசி, பச்சரிசி, ஜவ்வரிசி மூன்றையும் ஒன்றாக கலந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

 நன்றாக ஊறியதும், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன், கேரட், தேங்காய் துருவல், பச்சைமிளகாய், மல்லித்தழை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து பணியார குழியில் பணியாரங்களாக சுட்டெடுக்கவும்.