இஞ்சி - 250 கிராம்,
வெல்லம் - 250 கிராம்,
மிளகாய்ப்பொடி - ஒன்றரை டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - சிறிதளவு,
புளி - எலுமிச்சை அளவு,
பச்சை மிளகாய் - 8,
நல்லெண்ணெய் - 300 மில்லி,
காய்ந்த மிளகாய் - 6,
உப்பு - தேவைக்கேற்ப,
கடுகு - ஒரு தேக்கரண்டி,
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப.
இஞ்சி, பச்சை மிளகாயை சிறுதுண்டுகளாக வெட்டுங்கள். புளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவையுங்கள். வெல்லத்தை உடைத்து தூளாக்குங்கள். வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளியுங்கள்.
கடுகு வெடித்துக் கிளம்பும்போது, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கள். நன்கு வதங்கி வாசம் பரவியதும், மிளகாய்த்தூள், பெருங்காயத் தூளைப் போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, வெல்லத்தைப் போட்டு கொதிக்க விடுங்கள். கொதிவந்து திரண்டதும் இறக்கி விடுங்கள். இஞ்சிப்புளி ரெடி!