கெட்டித் தயிர் - இரண்டரை கப்,
கன்டென்ஸ்டு மில்க் - 1 டின்.
நன்கு மிருதுவாகும் அளவுக்கு தயிரை அடிக்கவும். அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு மிருதுவாக்கவும். பிரஷர் குக்கரில் 3 செ.மீ அளவுக்குத் தண்ணீர் விடவும். தயிர் - கன்டென்ஸ்டு மில்க் கலவையுள்ள பாத்திரத்தை தண்ணீருக்குள் வைத்து ஃபாயில் அல்லது தட்டால் மூடி, 10 நிமிடங்களுக்கு வைக்கவும். கலவையில் கத்தியைச் செருகினால், கத்தியில் ஒட்டாமல் வந்தால், வெந்துவிட்டதாக அர்த்தம். குளிர வைத்துப் பரிமாறவும்.