Author Topic: ~ மேகமறைவில்.சூரியன் சோகமறைவில்.இன்பம் ~  (Read 591 times)

Online MysteRy

மேகமறைவில்.சூரியன்
சோகமறைவில்.இன்பம்





இந்தவாரம் என்ன எழுத வேண்டிவருமென
எண்ண அலைகளின் அலைபாய்வோடு
சின்ன சின்ன  ஆசைகளோடு தளம் வந்தேன்
தளம்வந்து நுழைந்து , படம்கண்டு பிழன்றேன் .

அந்தோ! ஒன்றுமில்லா படமென்றாலும்
ஒப்புக்காவது வரிபுனைந்து ,ஒப்பேற்றிடலாம்
இப்படத்திற்கென்ன செய்வதென, ஒன்றும்புரியாது
இலக்கின்றி,  இயந்திரத்தனமாய் திரிந்திடும்   
பரபரப்பு பொருந்திய வான் மேகம் போல
கற்பனைக்குதிரைகள், வெவ்வேறு  கோணங்களில்
வெவ்வேறு எண்ணங்களில்  கட்டற்று திரிந்தன .

இறுதியில், இரண்டே புள்ளிகள் உயிராய் கிட்டின

இருக்கின்ற, மின்சாரத்தட்டுப்பாட்டின் கட்டுப்பட்டினில்
தமிழகத்தில்,பளிச் ஒளியுடன் பல்லைக்காட்டி திரிந்தால்
தமிழர்கள் தன்னை உருக்கி ஒருவழியாக்கிடுவரென
அஞ்சித்தான் , தன் ஒளியை சுருக்கி, மேகத்தின் பின் 
ஓடி ஒளிந்து தலைமறைவாகின்றதோ ?
உலகின்  ஒளிமயமான , மிகப்பெரிய ஒளிபெருக்கி  .

அடுக்கடுக்காய் , ஒன்றன்பின் ஒன்றென இன்னல்கள்
மேகங்களின் ரூபத்தினில், மறைத்திடும் போதிலும்
தன்னை முன்னேற்றிக்கொண்டு ,அதனால்
உலகிற்க்கே ஒளிதர முயன்றிடும்,சூரியனின்
உயர் எண்ணம் அதை என்ன சொல்வது ....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
REMBA NALLA IRRUKU ALEA THODARNTHU ELUTHUNGA VAALTHUGAL
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Online MysteRy

Thavi .. ithu oviyam ku prepare panathu but post podda mudila

Coz Outstation Poithaen

Athan Ithula Pottutaen

Thanks Thavi  :) All credit goes to my fren  :) :)