வரமிளகாய் - 10
முழுபூண்டு - ஒன்று
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு
முட்டை - ஒன்று
தோசைமாவு - ஒரு கப்
கொதிக்கும் நீரில் வரமிளகாயை 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பூண்டுகளை உரித்து வைக்கவும்.
பின்னர் இரண்டையும் உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
தோசைகல்லில் தோசையை வார்க்கவும்.
அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி சமமாக எல்லா இடங்களிலும் பரப்பவும்.
அரைப்பதமாக வெந்ததும் கார சட்னி 2 தேக்கரண்டி சேர்த்து எல்லா இடங்களிலும் சமமாக பரப்பவும்.
இரு பக்கமும் வேகவிட்டு மடித்து பரிமாறவும்.