பப்பாளிகாய் (சிறியது) -1
* பால்-1 கப்
* ஜீனி - 1/4 கப்
* ஏலப்பொடி (சிறிதளவு)
* கடுகு -1/4 டீஸ்பூன் (தாளிக்க)
* எண்ணெய் - 1 டீஸ்பூன் (தாளிக்க)
பப்பாளியை தோல் மற்றும் விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலுடன் ஜலம்(water) சேர்த்து அதில்
பப்பாளி துண்டுகளை போட்டு நன்கு வேக வைக்கவும்
நன்றாக குழைய வெந்தவுடன் ஜீனி சேர்த்து கிளறவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளிக்கவும்
ஜீனி நன்றாக கரைந்தபின் ஏலப்பொடி சேர்த்து தாளித்த கடுகு சேர்த்து
நன்றாக கிளறி எடுத்து வைக்கவும்.
இப்போது பப்பாளி காய் பால் கூட்டு தயார்.