Author Topic: கேரட் பர்ஃபி  (Read 974 times)

Offline kanmani

கேரட் பர்ஃபி
« on: November 05, 2012, 12:40:58 PM »
 

    கேரட் - துருவியது
    வெண்ணெய் - ஒரு கப்
    பால் - 2 கப்
    சர்க்கரை - சுவைக்கு ஏற்ப
    ஏலக்காய் - 2
    பாதாம் - ஸ்லைஸ் செய்தது

 

 
   

சர்க்கரையுடன் ஏலக்காயை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
   

ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு கரையும் வரை சூடாக்கவும்.
   

பின் துருவிய கேரட்டை சேர்த்து கை எடுக்காமல் கிளறவும்.
   

கேரட் வெந்து சற்று நிறம் மாறியதும், பாலை சேர்த்து நன்கு கிளறவும்.
   

ஒரு பத்து நிமிடம் கழித்து சர்க்கரை சேர்த்து நன்கு சுருண்டு வரும் பதம் வரை கிளறவும்.
   

நன்கு கெட்டியான பிறகு அடுப்பை அணைத்து ஆறவிட்டு மீண்டும் ஒரு முறை சூடு செய்து கிளறினால் கெட்டியாக அதே சமயம் மிருதுவாக வரும் பதத்தை ஒரு கப்பில் போட்டு நெய் தடவிய தட்டில் தட்டவும்.
   

பின் சமநிலை செய்து, துண்டுகளாக்கி பாதாம் வைத்து அழகுபடுத்தவும். சுவையான கேரட் பர்ஃபி ரெடி.

 

ஒவ்வொரு முறையும் பரிமாறும் போது சிறிது சூடாக்கி கொடுத்தால், கடையில் வாங்கியது போல சுவையாக இருக்கும்.