Author Topic: தேங்காய் பர்ஃபி  (Read 762 times)

Offline kanmani

தேங்காய் பர்ஃபி
« on: November 05, 2012, 12:33:42 PM »

    தேங்காய் - ஒரு கப்
    சர்க்கரை - 1 1/2 கப்
    நெய் - 3/4 கப்
    ஏலக்காய்- 6
    முந்திரி பருப்பு- 15

 

 
   

தேங்காயை நல்ல வெள்ளையாகத் துருவிக் கொள்ளவும். 4 தேக்கரண்டி நெய்யில் முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்து கொள்ளவும்.
   

வாணலியில் 1 1/2 கப் சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து பாகாக்கவும்.
   

கையால் தொட்டுப் பார்த்து ஒரு கம்பிப் பதம் வந்ததும், துருவிய தேங்காயை அதில் சேர்த்து கிளறவும். வறுத்த முந்திரி பருப்பு, பொடித்த ஏலப்பொடியை சேர்க்கவும்.
   

தேங்காயும், பாகும் சேர்ந்து கெட்டியானதும் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.
   

பாத்திரத்தில் ஒட்டாமல் பர்ஃபி பதம் வந்ததும் தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.
   

கண்ணைக் கவரும் வெண்ணிற தேங்காய் பர்ஃபி நீங்கள் சாப்பிடவும், பரிமாறவும் ரெடி.