Author Topic: மக்காச்சோள சூப் செய்வது எப்படி?- How to make corn soup?  (Read 977 times)

Offline kanmani


மக்காச்சோளச் சூப் செய்வதற்கு என்னென்ன தேவை என்று முதலில் பட்டியிட்டுவிடுவோம்.

தேவையானவை:

பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
காரட் - 2
நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப்
துருவி கோஸ் - 1/2 கப்
பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
மக்காச்சோள முத்துகள் -  1/2 கப்
ஜவ்வரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு -  1/2 கப்
மிளகுத்தூள் -  1/2 டீஸ்பூன்
சர்க்கரை -  1/2 டீஸ்பூன்

செய்முறை:

வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் மூன்றயும், சிறிது எண்ணெயில் வதக்கி, நைசாக அரைத்துக் கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய  காய்கறிகளுடன், மக்காச்சோளம், வெங்காய விழுது சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆனால் குழையவிடக்கூடாது.

ஜவ்வரிசி மாவை 2 கப் தண்ணீரில் கலந்து கொழகொழவென கண்ணாடி பதத்திற்கு வரும்வரை கஞ்சியாக காய்ச்சவும்.

அதனுடன் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

சூப் சற்று திக்காக இருக்க வேண்டுமானால், 1/2 டீஸ்பூன் மக்காச்சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதை சூப்புடன் கலந்து கொதிக்க விடவும்.

சுவையான மக்காச்சோள சூப் தயார்..