எலும்புருக்கி நோயைத் தடுக்கும் ஆரஞ்சுப் பழம்..
1. பற்கள், எலும்புகள் பல்லீறுகள் வியாதிகளுக்கு இது நல்ல மருந்து.
2. எலும்புருக்கி நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
3. பல்லில் வரும் ரத்தம், ஈறு வீங்குதலுக்கு இது நல்ல பலன் கொடுக்கும்.
4. ஸ்கர்வி நோய்க்கு நல்ல மருந்து.
5 புற்று நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் ஆரஞ்சுப் பழத்திற்கு உண்டு.
பல வியாதிகளைக் குணப்படுத்தும் இந்தப் பழத்தை நாள்தோறும் காலையோ, மாலையோ பயன்படுத்தலாம். குறிப்பாகக் குழந்தைகளுக்கு மிகச் சிறந்தது.
சிவசைலம் என்ற இடத்தில் உள்ள நல்வாழ்வு ஆசிரமத்தில் இயற்கை உணவு ஆராய்ச்சி மையம் தொண்டையில் உள்ள புற்று நோய்க்கு ஆரஞ்சுச் சாற்றையே முக்கிய இயற்கை உணவாக அளித்துக் குணப்படுத்தி உள்ளனர். அதே போன்று பல வியாதிகளைக் குணப்படுத்த ஆரஞ்சுச் சாற்றைப் பயன்படுத்துகின்றனர்.
அலோபதி மருத்துவர்கள் நோயாளிகளை ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிடும்படி பரிந்துரை செய்கின்றனர்.
கோடையில் அதிகமாக ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிடப் பழக வேண்டும். உடல் உஷ்ணத்தைக் குறைத்துப் பல வியாதிகளைக் குணப்படுத்தும் ஆரஞ்சு நம் உணவில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அடுத்தவர்களுக்கும் எடுத்துச் சொல்லி அதன் பயனை அனுபவிக்கச் செய்வதுடன் நாமும் பயன் அடைவோம்.