குண்டு மொச்சை குழம்பு
தேவையானவை: குண்டு மொச்சை – முக்கால் கப், கத்திரிக்காய் – 2, முருங்கைக்காய், கீறிய பச்சை மிளகாய், தக்காளி, பெரிய வெங்காயம் – தலா 1, புளி – எலுமிச்சை அளவு, பூண்டு – 2 பல், தேங் காய் துண்டுகள் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனி யாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, துவரம்பருப்பு – ஒரு கைப்பிடி, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
செய்முறை: காய்களை நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில் மொச்சையை வறுத்து, குக்கரில் போட்டு தண்ணீர் விட்டு, 5 நிமிடம் வேக வைக்கவும் (ஊற வைத்து, வேக வைப்பதனால் 3 விசில் வந்தால் போதும்). துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளி த்து, தனியே எடுத்து வைக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்தரிக்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, கறி வேப்பிலையை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதனுடன் தேங் காய் – சீரக விழுதை சேர்த்து ஒரு முறை கிளறவும். இவற்றை குக்க ரில் போட்டு, புளியைக் கரைத்துவிட்டு, வேக வைத்து… பருப்பு, மொ ச்சை, தாளித்தது ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.