Author Topic: மிக்ஸ்டு மிளகாய் குழம்பு  (Read 1212 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 122
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மிக்ஸ்டு மிளகாய் குழம்பு

தேவையானவை: பச்சை மிளகாய் – 10, குடமிளகாய் – 2, சின்ன வெங்காயம் – ஒரு கப், தக்காளி – 1, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, வெந்தயம், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், குடமிளகாய், தக்காளி, வெங்காய த்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந் தயம், சீரகம் போட்டு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, கொதிக்கவிடவும். மிளகாய் நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்