Author Topic: சுக்கு குழம்பு:  (Read 1192 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
சுக்கு குழம்பு:
« on: October 28, 2012, 11:15:53 AM »
சுக்கு குழம்பு:

தேவையானவை: சுக்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ் பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப், நறுக்கிய தக்காளி – கால் கப், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப் பிலை – சிறிதளவு, மிளகாய்த்தூள் – அரை டீஸ் பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண் ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸி யில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த தும் கடுகு, உளுத் தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய தக்காளி யை ப் போட்டு வதக்கி, புளிக் கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க் கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொ டித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்