அவல் - 2 கப்
சர்க்கரை - கால் கப்பிற்கு சற்று கூடுதல் (அ) சுவைக்கேற்ப
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 3 மேசைக்கரண்டி
பால் - கால் கப் (அ) தேவைக்கேற்ப
முந்திரி - சிறிது
அவலை வெறும் கடாயில் லேசாக சிவக்க வறுத்து எடுத்து மிக்சியில் பொடி செய்யவும்.
நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.
சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து பொடி செய்யவும்.
பொடித்த அவல், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
பின் இத்துடன் வறுத்த முந்திரி மீதம் உள்ள நெய் சேர்த்து கலந்து விடவும்.
பிடிப்பதற்கு தேவையான அளவு மட்டும் சிறிது சிறிதாக பால் விட்டு கலந்து உருண்டையாக பிடிக்கவும். சுவையான அவல் உருண்டை தயார். பால் சேர்ப்பதால் ஒரே நாளில் முடித்து விட வேண்டும்.