Author Topic: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!  (Read 879 times)

Offline kanmani


தயிர்

தயிரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வைட்டமின் டி உள்ளது. அதிலும் இந்த தயிரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள், குடல் பாதையை எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாப்பதோடு, உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் தயிர் சாப்பிட்டால் செரிமான மண்டலமும் நன்கு செயல்பட்டு, உடலில் உள்ள கெட்ட பாக்டீயாக்களை எளிதில் வெளியேற்றிவிடும்.



இனிப்பு உருளைக்கிழங்கு

இனிப்பு உருளைக்கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான பீட்டா கரோட்டீன் அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிடுதால் முதுமை தோற்றம் எளிதில் ஏற்படாமல் இருப்பதோடு, சில ஆய்வுகளில், பெருங்குடல் மற்றும் மலக்குடல்களில் ஏற்படும் புற்றுநோய்களை வராமல் தடுக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


காளான்

காளானில் செலீனியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் பி சத்துக்களான ரிபோஃப்ளாவின் மற்றும் நியாசின் போன்றவை உள்ளது. அதிலும் காளானில் லென்டினான் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது. இதனால் காளானை சாப்பிடுவதால், உடலில் பல புற்றுநோய்கள் வராமல் இருக்கும். சொல்லப்போனால், காளான் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கூட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன.


பாதாம்

வைட்டமின் பி சத்துக்களான ரிபோப்ளேவின் மற்றும் நியாசின் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. அதேப்போல் இதில் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவு வைப்பதோடு, உடலில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கிரீன் டீ

தினமும் கிரீன் குடித்தால், உடல் எடை மட்டும் குறைவதில்லை. இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான எஃபிகளோகாட்டிசின், வைட்டமின் சி மற்றும் பி உள்ளது. இதனால் உடலை எந்த ஒரு சளி, இருமல் போன்றவை எதுவும் அண்டாமல் இருக்கும். மேலும் இந்த கிரீன் டீ புற்றுநோய்கள், இதய நோய், ஹைப்பர் டென்சன் போன்ற எதுவும் வராமல் தடுக்கும்

கீரைகள் மற்றும் பிராக்கோலி

கீரைகள் மற்றும் பிராக்கோலியில் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் பொருளும் இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


பெர்ரி

பெர்ரிப் பழங்களில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆகவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், இதய நோய், இரத்தக் குழாய்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம்.


பூண்டு

அதிக நறுமணம் உள்ள உணவுப் பொருளான பூண்டிலும் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அடங்கியுள்ளன. ஆகவே இத்தகைய பூண்டை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாக்கலாம்.