Author Topic: பட்டர் ரைஸ்  (Read 781 times)

Offline kanmani

பட்டர் ரைஸ்
« on: October 24, 2012, 09:57:32 PM »
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
வெண்ணெய் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாசுமதி அரிசியை கால் மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவி, குக்கரில் அதனை போட்டு, தண்ணீர் ஊற்றி, விசில் விட்டு இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் உப்பு சேர்த்து, வேக வைத்துள்ள சாதத்தை போட்டு, நன்கு கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான பட்டர் ரைஸ் ரெடி!!!

குறிப்பு: வேண்டுமென்றால் இதனுடன் கேரட், பீன்ஸ் போன்றவற்றை வேக வைத்து சேர்த்துக் கொள்ளலாம்.