எவரெவரோ நடமாடும்
என் இதய தெருவில்
நடமாடுகின்றன
உன் நினைவுகளும்
கசியும்.. கண்ணீரின்
முற்றுப் புள்ளியில் இருந்து
முளைத்து கிளைக்கிறது
என் ஆற்றாமையின்
நெருப்பு செடிகள்..
நினைவின் ஆன்மா அழும்,
தனிமையை கொளுத்தி
எரிகிறது
நம் பிரிவு பிறைகள்
இல்லாத ஒரு நிறத்தை
இதழில் விளாவி
மலர்த்து விடுகின்றன
ஏக்கப் பூக்கள்..
வரவேற்பு வாசகங்களும்
ஒளிப்பந்தல்களும் இட்டு
அலங்கரித்த என் முற்றத்தில்
நீ வராமையால்
வழிந்தோடும் வெறுமையில்
கனத்து சாய்கிறது
வாடிய என் முகம்!