Author Topic: என் ஞாயிற்றுக்கிழமையின் பொழுதுகள்.....  (Read 481 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

பொதுவாய் ஞாயிற்றுகிழமை என்றால்
இனிமையானதுதான்
ஏன், எனக்கும் இனிமையின் சுரங்கம்தான்
பள்ளிபடித்த காலம் முதல்,
இதோ,இரண்டுஆண்டுகள் முன்பு வரை

இன்னும் துல்லியமாய் சொல்வதென்றால்
அனுதின அன்றாட வாழ்க்கையில்
அணுகிடும் அத்தனையும் அழகைகாணும்
அனுபவம்  அதை வழக்கமாய் செய்திட்ட
செக்கச்சிவந்த செந்தாமரையே !
உன் அறிமுகத்திற்கு முன்புவரை .

இன்றோ,
ஒற்றை நாளை உன்பங்கீடின்றி
நகர்துவதேன்பது கிட்டத்தட்ட,
நத்தையின் நடைக்கீடு

ஆலையின் எந்திரத்தினில் சிக்குண்டிருக்கும்
கட்டுக்கரும்பின் , இக்கட்டுநிலையில்,  நீயில்லலா

என்  ஞாயிற்றுக்கிழமையின் பொழுதுகள் ..

தொடர் சாட்டையடியினால் சோர்ந்து
பொறுமையுடன் , சொரணையையும் 
இழந்திடும் எருமை மாடாய்

என் ஞாயிற்றுக்கிழமையின் பொழுதுகள் ...

வாரநாட்களில், வேலைபொழுதுகளில்
சாய்ந்தமர்ந்திட 10 நிமிடம் கிடைக்குமா என
இரைதேடும் பருந்தினைபோல் அலைபாய

நாள்முழுக்க ஓய்வெடுக்க நேரமிருந்தும்
ஓர்நொடியும் அனுமதியா நின் நினைவுகளால்
பாவம் !நாய்பட்ட  பாடுபடும்

என் ஞாயிற்றுக்கிழமையின் பொழுதுகள்   ...

இக் கொடுமைக்கெலாம்,  மகுடம் இட்டதுபோல்
நற் பதிப்புக்களை வடித்திடுவோமெனவும்
வடித்திட்ட ,பொற்பதிப்புக்களை பதித்திடுவோமெனும்
மதிப்பின் மிதப்பினில் சுகித்துகிடந்த என் நினைப்புகளுடன்
மிதியடியாய்  மிதித்து சிதைந்திடும்

என்  ஞாயிற்றுக்கிழமையின்  பொழுதுகள்.....