Author Topic: என்னுள் நீ  (Read 1889 times)

Offline thamilan

என்னுள் நீ
« on: August 18, 2011, 11:06:21 PM »
கொளுத்தும் கற்பூரம் போல‌
உன் காதலால்
நான் அழிந்து போவேன்
என்று எனக்குத் தெரியும்

அதனால் உன்னிடமிருந்து தப்ப‌
இருளுக்குள் ஓடினேன்
நீ ஒளியாக வந்தாய்

நான் உறக்கத்தில் ஒளிந்தேன்
நீ கனவாக வந்தாய்

நான் விதையில் ஒளிந்தேன்
நீ நீராக வந்தாய்

நான் வீணையில் ஒளிந்தேன்
நீ விரலாக வந்தாய்

நான் பாவத்தில் ஒளிந்தேன்
நீ மன்னிபாக வந்தாய்

என்னை விட்டு நீ
எங்கே ஓட முடியும்
நான் இல்லாத இடம்
ஏது
என்றாய் நீ

Offline Global Angel

Re: என்னுள் நீ
« Reply #1 on: August 21, 2011, 08:33:00 PM »
nice kavithai thamilan... ;)