கேழ்வரகு உடலுக்கு மிகவும் நல்லது. இதனை அதிகம் சாப்பிட்டால், உடல் நன்கு பலம் அடையும். அதிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். ஆகவே அத்தகையவர்களுக்கு கேழ்வரகை வைத்து சுவையான முறையில் எப்படி ஒரு அடை செய்வது என்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தது, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை மற்றும் சிறிது உப்பு சேர்த்து ஓரளவு வதக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மற்றும் வதக்கிய பொருட்களை போட்டு, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு தோவைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் அந்த மாவை அடைப் போலத் தட்டி, கல்லில் போட்டு, நன்கு எண்ணெய் ஊற்றி, இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான கேழ்வரகு கார அடை ரெடி!!! இதனை சட்னியுடனும் சாப்பிடலாம், சட்னி இல்லாமலும் அப்படியே சாப்பிடலாம்.